இந்த போட்டோவில் இருக்கும் பிரபல நடிகை யாருன்னு தெரியுமா..? கண்டிப்பா உங்களால கண்டுபுடிக்கவே முடியாது…

By Begam on மாசி 21, 2024

Spread the love

சமீபகாலமாகவே பிரபலங்களின் சிறுவயது புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. அந்த புகைப்படங்களை பதிவு செய்து இவர்கள் யார் என்று கேள்வியும் எழுப்பப்பட்டு வருகிறது. அந்தவகையில் தற்பொழுது பிரபல முன்னணி நடிகையான நடிகை சாய் பல்லவியின் சிறுவயது புகைப்படம் இணையத்தில் வெளியாகி உள்ளது.

   

நடிகை சாய் பல்லவி விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘உங்களிள் யார் அடுத்த பிரபுதேவா’ என்ற நிகழ்ச்சியின் மூலம் தமிழில் அறிமுகமானார். பின்னர் இவர் தமிழில் வெளிவந்த ‘தாம் தூம்’ என்ற திரைப்படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்தார். இதன் பிறகு மலையாளத்தில் ‘பிரேமம்’ என்ற திரைப்படத்தில் ‘மலர் டீச்சர்’ ஆக அறிமுகமாகி திரையுலகில்  பிரபலமானார்.

   

 

இதை தொடர்ந்து அவர் தமிழில் மாரி 2, என் ஜி கே போன்ற திரைப்படங்களில் தமிழின் முன்னணி ஹீரோக்களுடன் நடித்துள்ளார். இவர் நடிப்பில் வெளியான விராத பர்வம் மற்றும் கார்க்கி திரைப்படம் ரிலீஸாகி மக்களிடையே வரவேற்பு பெற்றது.

இதைத்தொடர்ந்து பல்வேறு மொழிகளில் கமிட்டாகி பிசியாக நடித்து வரும் இவர் தற்பொழுது தமிழில் நடிகர் சிவகார்த்திகேயனுடன் இணைந்து அமரன் திரைப்படத்தில் நடித்து வருகிறார். தற்பொழுது இவரின் சிறுவயது புகைப்படம் இணையத்தில் வெளியாகி படுவைரலாகி வருகிறது.