தமிழ் சினிமா துறையில் பாடல் ஆசிரியராகவும் கமல்ஹாசன் கட்சியான மக்கள் நீதி மைய கட்சியின் செயலாளராகவும் இருந்தவர் பாவது தான் சினேகன் அவர்கள். இவர் கடந்த 2018 ஆம் ஆண்டு நடிகை ஜெயலட்சுமி மீது மோசடி வழக்கு ஒன்று சென்னை திருமங்கலம் காவல் நிலையத்தில் அளித்திருந்தார், தற்போது அந்த வழக்கின் முடிவு பெற்று ஜெயலட்சுமி கைது செய்துள்ளார்கள்.
இவ்வழக்கின் கண்ணோட்டம் என்னவென்றால்; பாடலாசிரியர் சினேகன் அவர்கள் சினேகன் அறக்கட்டளை என்று ஒரு அறக்கட்டளை நடத்தி வருகிறார், தற்போது அந்த அறக்கட்டளையின் பெயரில் ஜெயலட்சுமி அவர்கள் போலியாக இணையதளத்தில் கணக்கு ஒன்று தயாரித்து அதன் மூலம் பல பேரிடம் மோசடி செய்து நிதி திரட்டி அந்த பணத்தை ஏமாற்றி வாங்கி உள்ளார், இதை அறிந்த சினேகன் அவர்கள் சென்னை திருமங்கலம் காவல் நிலையத்தில் இவர் மோசடி செய்து உள்ளார் என்று புகார் அளித்துள்ளார்.
ஜெயலட்சுமி அவர்கள் சிநேகன் மீது புகார் ஒன்று அளித்துள்ளார், இது என்னுடைய அறக்கட்டளை என்றும் இவர்தான் மோசடி செய்கிறார் என்றும் வழக்கு நாடி உள்ளார், ஆனால் தற்போது போலீசார் கண்டறிந்து உண்மையை வெளி கொண்டு வந்துள்ளார்கள். சினேகன் 2015 ஆம் ஆண்டு அறக்கட்டளை உருவாக்கியுள்ளார் ஆனால் நடிகை ஜெயலட்சுமி அவர்கள் 2018 ஆம் ஆண்டு தான் இந்த அறக்கட்டளையை போலியாக தயாரித்து அதன் மூலம் பணம் திரட்டி மோசடி செய்து வருகிறார் என்று அப்பட்டமாக காவல்துறையினர் கண்டறிந்து விட்டார்கள், அதற்கடுத்தவாறு போலீசார் நடிகை ஜெயலட்சுமி அவர்களை குற்றப்பிரிவு மோசடி வழக்கில் விசாரிப்பதற்காக கைது செய்துள்ளார்கள்.
விஜயலட்சுமி அவர்கள் மோசடி செய்து வாங்கிய பணத்தை போலீசார்கள் ஆவணத்துடன் ஆதாரமாக வைத்துள்ளார்கள், அவர் இதுவரை யாரிடம் எவ்வளவு பணம் மோசடி செய்துள்ளார் எத்தனை பொய்யான இணையதளத்தில் கணக்கு ஓபன் செய்து வைத்திருக்கிறார் என்று அனைத்து ஆதாரங்களையும் திரட்டி வைத்துள்ளார்கள். இதன் அடிப்படையில் தான் ஜெயலட்சுமி அவர்கள் மீது வழக்கை தொடர்ந்து உள்ளார்கள்.
