19 வயதில் ‘தங்கல்’ பட நடிகை திடீர் மரணம்.. அதிர்ச்சியில் உறைந்த திரையுலகினர்.. காரணம் என்ன..?

By Ranjith Kumar on மாசி 17, 2024

Spread the love

கடந்த 2016 ஆம் ஆண்டு நிதிஷ் திவாரி இயக்கத்தில் அமீர்கான் நடிப்பில் வெளியான தங்கல் திரைப்படம் மல்யுத்த வீராங்கனைகளான கீதா போகத் மற்றும் பபிதா போகத்தின் வாழ்க்கை வரலாறு மற்றும் அவர்களை வீராங்கனையாக மாற்றிய தந்தை மகாவீர் சிங் போகத்தின் கதையாக உருவாகியிருக்கும். உலக அளவில் 2000 கோடி ரூபாய் வசூலை ஈட்டி பாகுபலி 2 வசூலை அமீர்கானின் தங்கல் திரைப்படம் முறியடித்தது குறிப்பிடத்தக்கது. மூத்த மகள் கீதா போகத் கதாபாத்திரத்தில் பாத்திமா சனா ஷேக் நடித்திருந்தார்.

இளையமகள் பபிதா போகத் கதாபாத்திரத்தில் பாலிவுட் நடிகை சானியா மல்கோத்ரா நடித்திருந்தார். அவரது இளம் வயது கதாபாத்திரத்தில் தான் குழந்தை நட்சத்திரமாக சுஹானி பட்னாகர் நடித்திருந்தார். தங்கல் திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்த சுஹானி பட்னாகர் அதன் பின்னர் இந்தி சீரியல்கள் மற்றும் சில படங்களில் நடித்து வந்தார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் நடைபெற்ற விபத்து ஒன்றில் அவரது கால் முறிந்து சிகிச்சைப் பெற்று வந்தார். ஆனால், அந்த சிகிச்சையில் அவருக்கு ஏற்பட்ட பின்விளைவுகள் காரணமாக அவரது உடல் நலம் குன்றத் தொடங்கியது.

   

டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் சில நாட்கள் சிகிச்சை பெற்று வந்தவர், தற்போது சிகிச்சை பலனின்றி உயிரிழந்திருப்பதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன. குழந்தை நட்சத்திரமாக பாலிவுட் ரசிகர்களை கவர்ந்த சுஹானி பட்னாகர் திடீரென உடல்நலக்குறைவு காரணமாக உயிர் இழந்தது பாலிவுட் ரசிகர்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. பாலிவுட் பிரபலங்கள் பலர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.