ஏ.ஆர். முருகதாஸ் ஓர் இந்தியத் திரைப்பட இயக்குநர், திரைக்கதை ஆசிரியர், மற்றும் திரைப்படத் தயாரிப்பாளர் ஆவார். தமிழ், தெலுங்கு, இந்தி மொழித் திரைப்படங்களை இயக்கி வருகிறார். தீனா திரைப்படத்தின் மூலமாக இயக்குனராக அறிமுகமாகி பின்னர், ரமணா, கஜினி, துப்பாக்கி உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கியுள்ளார்.
முருகதாஸ் கள்ளக்குறிச்சியில் பிறந்து திருச்சி பிசப் ஹீபர் கல்லூரியில் இளங்கலைப் பட்டம் பெற்றவர். அவர் தனது கல்லூரிப் பருவத்தில் தமிழ் சினிமா துறையில் ஆர்வமாக இருந்துள்ளார். கல்லூரிப் பருவத்தில் கலைநிகழ்ச்சிகளில் பங்கேற்பது, நடிப்பது, பிரபலமான நடிகர்களைப் போல் குரல் மாற்றிப் பேசுவது போன்ற விசயங்களில் ஆர்வமாக இருந்துள்ளார். பள்ளிப்பருவத்திலே சிறுகதைகள், நாவல்கள் எழுதுவதில் ஆர்வமாக இருந்துள்ளார். இதை அவரது நண்பர்கள் ஊக்கப்படுத்தியதால் தனது தொழிலை எழுத்தாளர் கலைமணியிடமிருந்து ஆரம்பித்துள்ளார். அதனைத் தொடர்ந்து பூச்சுடவா என்ற தமிழ்ப் படத்தில் நடித்து தமிழ் திரை உலகில் அறிமுகமானார். S.j. சூர்யாவிடம் அஜித் நடிப்பில் வெளியான வாலி, விஜய், ஜோதிகா நடிப்பில் வெளியான குஷி போன்ற படங்களில் உதவி இயக்குநராகவும் பணியாற்றியுள்ளார்.
இவரது ரமணா திரைப்படம், நடிகர் விஜயகாந்தின் முக்கியத் திரைப்படமாக அமைந்ததுடன், விஜயகாந்த் அவர்களுக்கு மாபெரும் மாற்றத்தை தமிழ் சினிமாவில் கொண்டு வந்தது, விஜயகாந்த் அவர்கள் இப்படத்தின் மூலம் மிகவும் பிரபலமும் ஆனார், இப்படத்தின் மூலம் அவர் எவ்வளவு தமிழ் மக்களுக்கு கருத்தளிக்க முயல்கிறார் என்று இப்ப படம் மூலம் காண்பித்து இருப்பார், அதன் புரட்சிகரமான கருத்துக்களுக்காக பெரிதும் பாராட்டப்பட்டது. இப்படத்தில் ஏ.ஆர் முருகதாஸின் கதை கருவின் ஆழத்தை மிகவும் போற்றி பெழிந்தார்கள். ஏ.ஆர் முருகதாஸின் அறிவுத்திறனை பார்த்து இப்படத்தில் வரும் ஒவ்வொரு காட்சியையும் செதுக்கியிருப்பதை பலரும் வியந்து ரசித்தார்கள். ரமணா திரைப்படம், தெலுங்கில் தாகூர் என்ற பெயரில் சிரஞ்சீவி நடிக்க மீண்டும் திரைப்படமாக்கப்பட்டது.

ஆனால் நீண்ட நாளாக இவருக்கு படம் எதுவும் சரியாக அமையவில்லை கடைசியாக “கத்தி” படத்தில் விஜயுடன் இணைந்து மாபெரும் வெற்றியை கொடுத்திருந்தார். அதன் பின் ரஜினியுடன் இணைந்து இயக்கிய “தர்பார்” அவருக்கு சரியான பெயரை வாங்கித் தரவில்லை. தற்போது நீண்ட நாள் பிறகு ஏ.ஆர் முருகதாஸ் டாப் ஸ்டார் ஆக விளம்பரம் சிவகார்த்திகேயன் அவர்களுடன் இணைந்து Sk 23 படத்தை இயக்கி வருகிறார், இப்படத்தில் இவர் கம் பேக் கொடுப்பார் என்று பலரும் எதிர்பார்த்து வருகிறார்கள். இவர்கள் இருவரும் சேர்ந்து உருவாக்கும் இந்த படைப்பை பார்ப்பதற்கு பல ரசிகர்கள் ஆவலாக காத்துக் கொண்டிருக்கிறார்கள்.
