காதலர் தின ஸ்பெஷல் : ஜெமினி – சாவித்திரி முதல் அட்லீ – பிரியா வரை.. காதலித்து கரம்பிடித்த பிரபலங்கள்.. ஒரு பார்வை..

By Begam on மாசி 14, 2024

Spread the love

திரை உலகப் பொருத்தவரை ஒன்றாக இணைந்து நடிக்கும் நடிகர், நடிகைகள் தங்களுக்குள் காதலித்து  திருமணம் செய்து கொள்வது வழக்கமாகிவிட்டது. இப்படி காதலித்து திருமணம் செய்து கொண்ட ஜோடிகள் வாழ்க்கை முழுவதும் ஒரு சிலர் மட்டுமே ஒன்றாக இணைந்து வாழ்கின்றனர். பலர் ‘ஆசை 60  நாள் மோகம் 30 நாள்’ என்பது போல பிரிந்தும் விடுகின்றனர்.  இந்நிலையில் பிப்ரவரி 14-ம் தேதி காதலர் தினமான இன்று தமிழ் திரையுலகில்  காதலித்து திருமணம் செய்து கொண்ட ஒரு சில நடிகர், நடிகைகளை பற்றி  இந்த பதிவில் நாம் பார்க்கலாம்.

கமலஹாசன் -சரிகா:

   

தமிழ் திரையுலகில்  உலக நாயகனாக ரசிகர்களால் கொண்டாடப்படுவர் நடிகர் கமலஹாசன். இவர் நடிகை சரிகாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

   

 

ஜெமினிகணேசன்-சாவித்திரி:

தமிழ் சினிமாவின் 70 ஸ் காலகட்டத்தில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வந்தவர் நடிகர் ஜெமினி கணேசன். இவரின் முதல் மனைவி அலமேலு என்பவர். இவர் நடிகை சாவித்திரியை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

நடிகர் அஜித் – ஷாலினி :

தல என்று தமிழ் ரசிகர்களால் கொண்டாடப்படுபவர் நடிகர் அஜித். இவர் நடிகை ஷாலினியை காதலித்து திருமணம் செய்து கொண்டார். ‘அமர்க்களம்’ திரைப்படத்தில் இணைந்து நடித்த போது இருவருக்கும் இடையே காதல் வந்தது. தற்போது இவர்கள் தங்களது வாழ்க்கையை மிகவும் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகின்றனர். இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர்.

சூர்யா -ஜோதிகா:

நடிகர் சூர்யா, நடிகை ஜோதிகாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். 2006 இல் இவர்கள் திருமணம் பெற்றோர்கள் முன்னிலையில் மிகவும் பிரமாண்டமாக நடைபெற்றது. தற்போது இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் மகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.

நடிகர் பிரசன்னா -சினேகா :

‘அச்சமுண்டு அச்சம் உண்டு’ படத்தில் இணைந்து நடித்த போது ஒருவரை ஒருவர் காதலித்தனர். இதைத் தொடர்ந்து 2012 இல் இவர்களது திருமணம் நடைபெற்றது. தற்போது இவர்களுக்கும் ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர்.

சரத்குமார் -ராதிகா:

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வந்தவர் நடிகர் சரத்குமார். நடிகர் ராதிகாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார் .

குஷ்பூ-சுந்தர் சி:

நடிகை குஷ்பூ இயக்குனர் சுந்தர் சி அவர்களை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். தற்பொழுது இவர்கள் நட்சத்திர தம்பதிகளாக திரையுலகில் வலம் வந்து கொண்டுள்ளனர்.

பார்த்திபன்-சீதா:

நடிகர் பார்த்திபன் நடிகை சீதாவை காதலித்து 1990 இல் திருமணம் செய்து கொண்டார். ஆனால் இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக 11 வருடங்கள் இணைந்து வாழ்ந்த இவர்கள் 2001 இல் விவாகரத்து பெற்று பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். இவர்களுக்கு இரண்டு மகள்கள் மற்றும் ஒரு வளர்ப்பு மகன் உள்ளதும் குறிப்பிடத்தக்கது.

ரகுவரன்- ரோகினி:

தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வந்தவர் நடிகர் ரகுவரன். இவர் நடிகை ரோகினியை 1996 திருமணம் செய்து கொண்டார். இவருக்கு ஒரு மகனும் உள்ளார். எட்டு வருடங்கள் நீடித்த இவர்கள் திருமண வாழ்க்கை 2004இல் முடிவுக்கு வந்தது .இருவரும் விவாகரத்து செய்து பிரிந்தனர்.

பாக்கியராஜ் -பூர்ணிமா :

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வந்தவர் நடிகர் பாக்கியராஜ். இவர் நடிகை பூர்ணிமாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். 1984 இவர்களது திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர்.

பொன்வண்ணன் – சரண்யா :

நடிகர் பொன்வண்ணன் தமிழ் திரை உலகில் குணசித்திர கதாபாத்திரங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர். இவர் நடிகை சரண்யாவை 1994 திருமணம் செய்து கொண்டார். நடிகை சரண்யா பொன்வண்ணன் அம்மா கதாபாத்திரங்களில் நடித்து பிரபலமானவர். தற்போது இவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள் இருப்பதும் குறிப்பிடத்தக்கது.

சாந்தனு – கீர்த்தி:

நடிகர் பாக்யராஜ் மகனான சாந்தனு, தொகுப்பாளனி கீர்த்தியை காதலித்து திருமணம் செய்து கொண்டார். தற்பொழுது இவர்கள் மகிழ்ச்சியாக தங்களது வாழ்க்கையை வாழ்ந்து கொண்டுள்ளனர்.

அட்லீ -பிரியா:

மிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத இயக்குனர்களில் ஒருவர் இயக்குனர் அட்லி. இவர் பிரியா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு மீர் என்ற ஒரு மகன் உள்ளது குறிப்பிடத்தக்கது.

ஆர்யா -சயீஷா:

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்கள் ஒருவராக வலம் வருபவர்  நடிகர் ஆர்யா. இவர் நடிகை சயீஷாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு மகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.