விஜய் டிவியின் டீ ஆர் பி யை ஏத்தும் ஷோவாக பிக் பாஸ் ஷோ நடைபெறுகிறது. இந்த நிகழிச்சியில் தற்போது சீசன் 7 நடைபெறுகிறது. இந்த பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி இறுதிகட்ட வாரம் நடைபெறுகின்ற நிலையில் வெளியே சென்ற போட்டியாளர்கள் மீண்டும் வீட்டிற்குள் வந்து பைனல் டாஸ்க் செலிப்ரேஷனில் கலந்து கொள்வது வழக்கம். இந்த சீசன் 7 நிகழிச்சின் போட்டியாளரான ஜோவிகா வனிதாயும் வந்துவிட்டார்.

போட்டியாளர் ஜோவிகா, வனிதா ராஜ்குமாரின் மூத்தமகள், வனிதா ராஜ்குமார் பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் பங்குபெற்ற போட்டியாளர்களில் ஒருவர். வனிதா பிக் பாஸ் வீட்டிற்குள் வந்தாலே சரவெடி தான் வெடிக்கும் என்பது எல்லோருக்கும் தெரியும். வனிதாவுக்காகவே பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியை அனைவரும் பார்த்து ரசித்தனர். இதனால் வனிதாவிற்கு ரசிகர்கள் அதிகமாகவும் இருந்திருந்தனர். அது போலவே ஜோவிகா வீட்டிற்குள் வந்ததுமே வனிதாவின் மகள் என்று நிரூபித்து வருகிறார்.

இதில் ஜோவிகா பைனல் லிஸ்டில் செலக்ட் ஆன தினேஷ், மாயா, அர்ச்சனா, மணி, விஷ்ணு ஆகியோரிடம் தனித்தனியே சென்று மக்களின் கருத்துக்களை பதிவிட்டு வருகிறார். இதில் தினேஷுசிடம் சென்று உங்களைப் பற்றி மக்கள் பேசுவதற்கு நீங்க எதுவுமே பண்ணல அதனால உங்களை யாருமே எதுவுமே பேசவே இல்ல என்று கூறினார். இதற்கிடையில் பூர்ணிமா வெளியேறியதும் மாயா அர்ச்சனா உடன் நெருங்கி பழகிவருகிறார் என்று எல்லாருக்கும் தெரியும்.

அர்ச்சனாவிற்கு ஆடியன்ஸ் சப்போர்ட் அதிகமாக இருப்பதால் அவருடன் நெருங்கி பழகி வருவதாக ஜோதிகா சுட்டிக்காட்டி காட்டினார். நீங்கள் ஏன் அவளுடன் பேசுகிறீர்கள் என்றும், வெளியில் வந்து பாருங்கள் நீங்கள் இந்த சீசன் 7 நிகழிச்சியில் இல்லை என்றால் எப்பவோ இந்த நிகழிச்சி முடிந்திருக்கும்; நீ இன்னும் வீட்டினுள் இருப்பதால் தான் இந்த நிகழ்ச்சி இறுதிவரை வந்திருக்கு என்று மாயாவிடம் பத்தவச்சிவிட்டார் ஜோவிகா வனிதா.
