கவிஞர் வாலி சினிமாவுக்குள் நுழைந்தது இப்படி தான்.. எம்.ஜி.ஆர் மற்றும் சிவாஜி வாலிக்கு வைத்த செல்ல பெயர் என்ன தெரியுமா..?

By Archana on தை 3, 2024

Spread the love

திருச்சி ஸ்ரீரங்கத்தில் ஆச்சார அனுஷ்டாங்கங்களை பின்பற்றிய அய்யங்கார் குடும்பத்தில் பிறந்தவர் வாலி. வாலியின் குடும்பத்துக்கு கரூர் மாவட்டத்தில் உள்ள வாங்கல் தான் பூர்வீகம். ரங்கராஜன் என்ற இயற்பெயர் கொண்ட வாலிக்கு இரண்டு விஷயங்கள் மீது தீராக்காதல் இருந்தது. ஒன்று, தமிழ். மற்றொன்று, ஓவியம். ரங்கராஜன் எழுதும் எழுத்துகள் எல்லாம் கவிதையாகின, வரையும் கோடுகள் எல்லாம் ஓவியங்களாகின. ரங்கராஜனின் ஓவியங்களை எல்லாம் பார்த்து ரசித்த அவருடைய தோழர் பாபுவுக்கு, ஆனந்த விகடன் பத்திரிகையின் ஓவியர் மாலியின் நினைவு வந்தது. அந்த நொடியில் நண்பன் ரங்கராஜனுக்கு வாலி என்ற புனைப்பெயரைச் சூட்டினார் பாபு.

#image_title

மருதநாட்டு இளவரசி படத்தின் வசனத்தை கேட்டு புல்லரித்தது வாலிக்கு. இதுபோன்ற தீப்பொறி வசனங்களை எழுதி, புகழ்பெற வேண்டும் என்ற எண்ணம் வாலியின் மனத்துக்குள் எழுந்ததுள்ளது. திரைப்படங்களுக்குப் பாடல்கள் எழுதவேண்டும் என்ற கனவை வளர்த்துக்கொண்டிருந்தார் வாலி. ஆனால் வாய்ப்புக்குதிரைதான் வாலியின் வாசலுக்கு வந்து சேரவில்லை. வாய்ப்புத்தேடி சென்னைக்குப் புறப்பட்டார். சென்னை வந்திறங்கிய வாலிக்கு அடைக்கலம் கொடுத்தவர் திருவல்லிக்கேணியில் தங்கியிருந்த ஸ்ரீரங்கத்து நண்பர் செல்லப்பா.

   
   

#image_title

 

அங்கு தங்கியபடியே நண்பர்கள் உதவியுடன் இசையமைப்பாளர்கள் வீடுகளில் ஏறியிறங்கி வாய்ப்பு கேட்டார். ஒருமுறை இசையமைப்பாளர் எம்.பி. சீனிவாசனிடம் தனது பாடல் வரிகள் சிலவற்றை வாசித்துக்காட்டினார் வாலி. பாடல் வரிகள் நன்றாக இல்லை என்பதை நாசூக்காகச் சொல்லிவிட்டார் எம்.பி.சீனிவாசன். என்றாலும், அந்தப் பாடலைப் பின்னாளில் வெளியான படத்தில் பயன்படுத்தினார் வாலி. அது வாலிக்கு மட்டுமல்ல, எம்.ஜி.ஆருக்கும் நீடித்த புகழைக் கொடுத்தது. அந்தப் பாடல், படகோட்டி படத்தில் இடம்பெற்ற “கொடுத்ததெல்லாம் கொடுத்தான்.. அவன் யாருக்காகக் கொடுத்தான்’பாடல்.

#image_title

சென்னையிலேயே நண்பர் வி.கோபாலகிருஷ்ணன் மூலம் போராடி 1959ஆம் ஆண்டு ‘அழகர் மலைக் கள்வன்’ படத்தில் பாட்டெழுத அவருக்கு வாய்ப்பு கிடைத்தது. அப்படியே தொடர்ந்து அவரது எழுத்துக்கள் சினிமாவில் ஒலிக்கத் தொடங்கின. ஆரம்ப காலத்தில் தனது நண்பர் நாகேஷூடன் வாய்ப்பு தேடி அலைந்தவர் பின்னாளில் அவருக்கும் பாடல்கள் எழுதியது வேறு கதை.