“இப்படி கூப்பிட்டா ஓடி வந்துடுவோம்..” ஹாட் லுக்கில் புகைப்படங்களை வெளியிட்ட’ பாரதி கண்ணம்மா’ சீரியல் நடிகை…

By Begam on தை 1, 2024

Spread the love

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி ரசிகர்களை பெருமளவில் கவர்ந்த சீரியல் ”பாரதி கண்ணம்மா”. இந்த சீரியலில் கண்ணம்மா என்ற கதாபாத்திரத்தை ஏற்று ஹீரோயினாக நடித்தவர் நடிகை ரோஷினி ஹரிபிரியா.

   

இதன் மூலம் அவர் ரசிகர்கள் மத்தியில் மிகப் பிரபலமானார். இந்த சீரியலில் இவரின் எதார்த்தமான நடிப்பு, எளிமையான தோற்றம் அனைவரையும் கவர்ந்தது என்றே கூறலாம்.

   

 

மேலும் இவருக்கென ஒரு தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. இந்நிலையில் ரோஷினி பாரதி கண்ணம்மா சீரியலை விட்டு வெளியேறியது நாம் அனைவரும் அறிந்ததே.

இதைத்தொடர்ந்து அவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான ”குக் வித் கோமாளி” நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். தற்பொழுது இவர் வெள்ளித்திரையில் கால்பதிக்க முயற்சி செய்து வருகிறார்.

சமூக வலைத்தளங்களில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கக்கூடியவர் நடிகை ரோஷினி. இவர் அவ்வப்போது தனது அழகான புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிடுவார்.

அதுபோல தற்பொழுது ஹாட் லுக்கில் இவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் படுவைரலாகி வருகிறது. இதைப்பார்த்த ரசிகர்கள் ‘நீங்களுமா இப்படி ?’ என கேள்வி எழுப்பி வருகின்றனர்.