மீண்டும் திரையுலகை உலுக்கிய சோகம்.. ‘தளபதி 68’ படக்குழுவில் உயிரிழந்த முக்கிய பிரபலம்.. 

By Begam on மார்கழி 28, 2023

Spread the love

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக கொடி கட்டி பறந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் விஜய். தற்பொழுது இவர் இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் ‘தளபதி 68’ திரைப்படத்தில் நடித்து வருகிறார். ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த திரைப்படதில் விஜய் – வெங்கட் பிரபு – யுவன் சங்கர் ராஜா கூட்டணி இணைகின்றனர். இத்திரைப்படத்தில் இதுவரை டபுள் ஆக்ஷனில் யாரும் செய்திடாத பல புதிய முயற்சிகளை எடுப்பதற்கு வெங்கட் பிரபு திட்டமிட்டுள்ளாராம்.

#image_title

அதன்படி நடிகர் விஜய் இத்திரைப்படத்தில் 19 வயது வேடத்திலும் நடிக்க உள்ளாராம். மேலும் இத்திரைப்படத்தில் நடிகை சினேகா, நடிகை லைலா, நடிகர் மைக் மோகன், நடிகர் விடிவி கணேஷ், நடிகர் யோகி பாபு என பல திரைபிரபலங்கள் நடிக்க இருப்பதாக கூறப்பட்டுள்ளது. தளபதிக்கு ஜோடியாக நடிகை மீனாட்சி சவுத்ரி நடிக்க இருப்பதும் குறிப்பிடத்தக்கது.

   
   

 

தென்னாபிரிக்கா, தாய்லாந்து, சென்னை என இத்திரைப்படத்தின் ஷூட்டிங் பல்வேறு சமீபத்தில் தளபதி 68 ஷூட்டிங் துருக்கியில் நடைபெற்றது. ‘ தளபதி 68’ படத்தின் தலைப்பு First லுக் உடன் வருகிற புத்தாண்டு அன்று அதிகாரப்பூர்வமாக வெளியாகவுள்ளது. இந்நிலையில் தளபதி 68 படத்திற்கு G.O.A.T = Greatest Of All Time என டைட்டிலை வைக்க இருப்பதாக இணையத்தில் வைரலாக பேசப்பட்டு வருகிறது.

இப்படி படப்பிடிப்புகள் மும்முரமாக நடந்து வரும் இந்த வேளையில், தளபதி 68 படத்தின் இயக்குனர் வெங்கட் பிரபு நேற்று தனது டுவிட்டர் பக்கத்தில் ஒரு சோகமான பதிவை வெளியிட்டிருந்தார்.  அதில் தயாரிப்பு குழுமம் AGS நிறுவனத்தில் ஒருவரான ஜாய்சன் என்பவர் உயிரிழந்துள்ளார் என்ற தகவலை சோகத்துடன் பகிர்ந்திருந்தார்.  அவர் மட்டுமின்றி தயாரிப்பளார் அர்ச்சனா கல்பாத்தி அவர்களும் தனது டுவிட்டர் பக்கத்தில் அவரது இழப்பு குறித்து உருக்கத்துடன் பதிவு செய்துள்ளார்.