கடந்த 30 ஆண்டுகளுக்கு முன் தமிழ் சினிமாவில் ரஜினி – கமல் படங்கள் நேரடியாக மோதிக்கொள்வது வழக்கம். குறிப்பாக தீபாவளி, பொங்கல் போன்ற பண்டிகை காலங்களில் இப்படி ரஜினி, கமல் படங்கள் ஒரே நேரத்தில் ரிலீஸ் ஆகி ரசிகர்களை உற்சாகப்படுத்தும். ரஜினி, கமல் படங்கள் திரையிட்ட தியேட்டர்களில் ரசிகர்கள் கூட்டம் அலைமோதும். இப்போது அதே போல் தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களாக இருக்கும் அஜீத், விஜய் படங்கள் இதுபோல் ஒரே நேரத்தில் ரிலீஸ் செய்யப்பட்டால் ரசிகர்களுக்கு கொண்டாட்டம்தான். ஆனால் தியேட்டர் உரிமையாளர்களை பொருத்த வரை இது பிரச்னைதான். ஏனெனில் இருதரப்பு ரசிகர்களிடையே மோதல் ஏற்பட்டால் முதலில் நொறுக்கப்படுவது தியேட்டர்கள்தான்.

இந்த ஆண்டில் அப்படி ஒரே நேரத்தில் வெளியான படங்கள்தான் விஜய் நடித்த வாரிசு மற்றும் அஜீத் நடித்த துணிவு ஆகிய படங்கள். கடந்த ஜனவரி மாதம் 14ம் தேதி பொங்கல் பண்டிகையன்று இந்த 2 படங்களும் ரிலீஸ் ஆனது. வங்கி கொள்ளையை மையமாக வைத்து ஆக்சன் திரில்லர் படமாக துணிவு இருந்தது. சரத்குமார், பிரபு, ஷாம், ஜெயசுதா, ராஷ்மிகா மந்தனா, யோகிபாபு ஆகியோர் விஜய் உடன் நடித்திருந்த வாரிசு படம், குடும்பக் கதையாக இருந்தது. வாரிசு படம் பேமிலி ஆடியன்ஸ் வரும் படமாகவும், வாரிசு சகல தரப்பினரும் வரும் படமாகவும் கடந்த பொங்கல் பண்டிகை நாட்களில் அமைந்தது. இப்படி விஜய். அஜீத் படங்கள் நேருக்கு நேர் மோதும்போது எந்த படத்துக்கு வரவேற்பு ரசிகர்களிடம் அதிகமாக இருந்தது, எந்த படம் அதிகமாக வசூலித்தது என்ற கேள்வி நிச்சயமாக எழுவது வழக்கம்தான்.

இதுகுறித்து சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் சினிமா விமர்சகர் செய்யாறு பாலு கூறியதாவது, கடந்த பொங்கலன்று வெளிவந்த விஜய் நடித்த வாரிசு, அஜீத்குமார் நடித்த துணிவு ஆகிய இரண்டு படங்களுக்குமே ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்தது. இந்த படங்களின் வசூலை பொருத்தவரை வாரிசு படம் வசூல் ரூ.285 கோடி என்றால், துணிவு படம் ரூ. 255 கோடி ரூபாய் வசூலித்தது. வசூலை பொருத்தவரை இரண்டு படங்களுக்கும் பெரிய வித்யாசமில்லை. ஆனால் தியேட்டர் உரிமையாளர்கள், விநியோகஸ்தர்களை பொருத்த வரை வெற்றிப்படம், லாபம் தந்த படம் என்றால் அது அஜீத்குமார் நடித்த துணிவு படம்தான்.
![]()
அதற்கு அவர்கள் வியாபார ரீதியான சில காரணங்களை கூறுகின்றனர். அதே வேளையில் இதுபோல் பண்டிகை காலங்களில் விஜய், அஜீத் படங்களை நேரடியாக களத்தில் இறங்குவதால் வசூல் இரண்டாகி விடுகிறது. அதனால் தனித்தனியாக அவர்களது படங்கள் வர வேண்டும் என்பதும் தியேட்டர் உரிமையாளர்கள், விநியோகஸ்தர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது, என்று கூறியிருக்கிறார் செய்யாறு பாலு.
