தற்பொழுது திருநெல்வேலி, கன்னியாகுமரி ,தென்காசி, தூத்துக்குடி போன்ற கனமழை காரணமாக வெள்ளத்தில் மூழ்கியுள்ளது. இதில் திருநெல்வேலி தூத்துக்குடி அதிக பாதிப்பு அடைந்துள்ளது. இந்நிலையில் தூத்துக்குடி மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தன்னால் இயன்ற உதவியை களத்தில் இறங்கி செய்து வருகிறார் இயக்குனர் மாரி செல்வராஜ்.

இந்நிலையில், நெல்லையில் ஏற்பட்ட மழை, வெள்ள பாதிப்புகளை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பார்வையிடச் சென்றபோது, மாரி செல்வராஜும் அவருடன் சென்றார். அப்போது அமைச்சர் உதயநிதியுடன் மாரி செல்வராஜ் இருக்கும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டது. மேலும், இது தொடர்பாக பல்வேறு விமர்சனங்களும் எழுந்தன.

இந்நிலையில், இந்த விமர்சனங்களுக்கு பதிலளிக்கும் வகையில் மாரி செல்வராஜ் தனது ‘எக்ஸ்’ வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “என் கலையும் கடமையும் நான் யார் என்று நிரூபிப்பது அல்ல. நீங்கள் யாரென்று உங்களுக்கு நிரூபிப்பது” என்று பதிவிட்டிருந்தார். யார் என்ன சொன்னாலும் ” இது என் ஊர், என் மக்கள். இயக்குனரா இல்லைன்னா கூட இப்படித்தான் அலைந்து இருப்பேன். அது வேற, இது வேற” என்று களத்தில் இறங்கி மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகிறார்.

தற்பொழுது மங்களகுறிச்சி பகுதியில் மழை வெள்ளத்தில் பாதிக்கப்பட்டு தங்குவதற்கு இடம் இல்லாமல் தவித்துக் கொண்டிருந்த குழந்தைகள், முதியவர்கள் ,பெண்கள் உட்பட அனைவரையும் பாதுகாப்பான முறையில் மீட்கும் பணியை இயக்குனர் மாரி செல்வராஜ் மேற்கொண்டுள்ளார். அப்பொழுது எடுக்கப்பட்ட வீடியோவை இணையத்தில் நெடிசன்கள் வைராலாக்கி வருகின்றனர். மேலும் அந்த வீடியோவை பகிர்ந்து ‘ வீட்டுக்குள் இருந்த குறை சொல்லும் நபர்களுக்கு மத்தியில் , களத்தில் இறங்கி விடாமல் மக்களுக்கு உதவி செய்யும் இயக்குனர் மாரி செல்வராஜை பாராட்டி உள்ளனர். இதோ அந்த வீடியோ…
pic.twitter.com/nmsqwP9gnZ
வீட்டுக்குள்ள இருந்து video போட்டு குறை சொல்ற Vishal-க்கு fire???? விடுறானுங்க, அதே களத்துல எறங்கி உதவி செய்யிற ????#MariSelvaraj ய கடிக்கிறானுங்க ????#SouthTNRains— ⚡ SANTOSH ???? (@off_santhosh24) December 21, 2023
