![BeFunky-collage 3 - Tamizhanmedia.net](https://tamizhanmedia.net/wp-content/uploads/2023/12/BeFunky-collage-3-1.jpg)
CINEMA
தினேஷ் – ரசித்தா விவாகரத்துக்கு காரணம் இந்த பிக் பாஸ் ஆண் போட்டியாளர் தானா..? பகீர் கிளப்பிய பிரபலம்..
ரக்சிதா மகாலட்சுமி, சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் மிக பிரபலமானவர். கடந்தாண்டு விஜய் டிவியில் நடந்த பிக்பாஸ் சீசன் 6ல் பங்கேற்றார். மூக்குத்தி என பட்டப்பெயர் வைத்து அவரை அழைத்த டான்ஸ் மாஸ்டர் ராபர்ட் அவர் மீது மிகுந்த ஆர்வம் காட்டினார். ஆனால் ரக்சிதா அவரை கண்டுகொள்ளாமல் அலட்சியப்படுத்தினார். ரக்சிதா ஏற்கனவே திருமணமானவர். தனது கணவர் தினேஷை பிரிந்து வாழ்ந்து வருகிறார். ஆனால் தினேஷ் தன் மனைவியுடன் சேர்ந்து வாழும் முடிவில்தான் இருக்கிறார்.
இந்நிலையில், வைல்டு கார்டு என்ட்ரியாக இப்போது நடந்துவரும் விஜய் டிவி பிக்பாஸ் நிகழ்ச்சியில் தினேஷ் பங்கேற்றுள்ளார். அங்கு மற்றொரு போட்டியாளராக இருக்கும் விஷ்ணுவுக்கும், தினேஷூக்கும் அடிக்கடி வாக்குவாதம், சண்டை நடக்கிறது. இந்த விஷ்ணு, ரக்சிதாவின் நெருங்கிய நண்பர்களில் ஒருவர் என்று கூறப்படுகிறது. இவர் இது சொல்ல மறந்த கதை என்ற சீரியலில் ரக்சிதாவுடன் நடித்த போது, நெருங்கிய நண்பராக பழகியவர் என்று தெரிய வந்துள்ளது.
என் மனைவி பிக்பாஸ் டைட்டில் வின்னராக ஆசைப்பட்டார். அதனால், அந்த டைட்டில் வின்னர் பரிசை வென்று அவருக்கு அதை பரிசாக கொடுப்பேன் என்று தினேஷ் கூறி வருகிறார். ஆனால், ரக்சிதா தனது வலைதள பதிவுகளில் மீண்டும் தினேஷூடன் சேர்ந்து வாழும் எண்ணமே தனக்கு இல்லை என்ற விதமாக தன் பதிவுகளை செய்து வருகிறார். தண்ணீரில் மூழ்கிக்கொண்டு மூச்சு திணறுபவர்களுக்குதான் அந்த கஷ்டமும், துன்பமும் தெரியும். அப்படி ஒ சிரமத்தை, கஷ்டத்தை என் மண வாழ்க்கையில் பட்டவள் தான் என்று பதிவிட்டு இருக்கிறார்.
மேலும், தன் கையில் தினேஷ் பெயரை டாட்டூஸ் செய்திருந்த ரக்சிதா, அதை அழித்துவிட்டு டிசைன் டாட்டூஸ் வரைந்து அந்த கை புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். அதில் என் மவுனங்கள் சொற்களால் நிரம்பியது, என் மவுனங்களால் என் மனதை தயார்படுத்திக்கொண்டேன் என எழுதியிருக்கிறார். அந்த வகையில் மீண்டும் தினேஷூடன் வாழ்க்கை இல்லை என்ற முடிவுக்கு வந்திருக்கிறார். 37 வயதாகும் ரக்சிதாவுக்கு, விஷ்ணு மீது உள்ள நட்புதான் இத்தனை பிரச்னைக்கும் காரணமா என்ற கேள்வியும் இப்போது பலமாக எழுந்துள்ளது.