CINEMA
பிக் பாஸை விட்டு வெளியே வந்த கூல் சுரேஷ்.. சிம்புவை பாக்காம எந்த நடிகரை சந்திச்சிருக்காரு பாருங்க..
தமிழ் சினிமாவின் சர்ச்சைக்குரிய நடிகர்களில் ஒருவர் தான் கூல் சுரேஷ். இவர் கடந்த சில வருடங்களாகவே முன்னணி நடிகர்களின் நடிப்பில் வெளியாகும் திரைப்படங்களை முதல் நாளே பார்த்து படம் குறித்து விமர்சனம் செய்து வருகிறார். அதனாலயே இவர் தற்போது ரசிகர்கள் மத்தியில் பிரபலமாகி விட்டார். அது மட்டுமல்லாமல் இவர் ஒரு தீவிர சிம்பு ரசிகரும் கூட.
எந்த ஒரு திரைப்படம் வெளியானாலும் அந்த படத்தை குறித்து நெட்டிசன்களிடம் முதல் நபராக கருத்து தெரிவிப்பவர் இவர் தான். தற்பொழுது இவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். பிக் பாஸ் வீட்டிற்குள் 75 நாட்களுக்கும் மேல் தாக்குப்பிடித்த இவர் கடந்த வார இறுதியில் வெளியியேற்றப்பட்டார்.
சில வாரங்களாகவே இவர் வீட்டிற்கு போக வேண்டும் எனவும் கூறி வந்ததாலும், விளையாட்டில் ஈடுபாடு இல்லாமல் உட்கார்ந்திருந்ததுமே இதற்கு காரணமாக கூறப்படுகிறது. மேலும் பிக் பாஸ் வீட்டில் இருக்க சுத்தமாக தனக்கு பிடிக்கவே இல்லை, சுவர் ஏறி குதிக்க முயற்சி செய்ததாலும் அவர் கூறியது போலவே அவரின் ஆசையை ரசிகர்களும் நிறைவேற்றினர் .
இந்நிலையில் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியே வந்த கூல் சுரேஷ் முதலில் நடிகர் சிம்புவை சந்திப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், நடிகர் சந்தானத்தை சந்தித்து இருக்கிறார். அவருக்கு சந்தானம் மாலை போட்டு பாராட்டி இருக்கிறார். அந்த வீடியோ தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. முதலில் அவர் தனது நண்பருடன் இணைந்து வீடியோ வெளியிட்டிருந்தார். இதைத்தொடர்ந்து நடிகர் சந்தானத்தை சந்தித்துள்ளார். இதோ அந்த வீடியோ…
View this post on Instagram