Connect with us

NEWS

நொடிக்கு 3 பிரியாணி Order.. 8 வருடமாக முதலிடம் பிடித்த பிரியாணி இது இதானாம்.. Swiggy வெளியிட்ட அறிவிப்பு..

பிரியாணி என்ற வார்த்தையை கேட்டால் பிடிக்காதவர்களே இருக்க முடியாது அந்த அளவிற்கு பிரியாணி மக்கள் மனதில் ஒரு சிம்மாசனமிட்டு அமர்ந்துள்ளது.  எத்தனை உணவு வகைகள் வந்தாலும் பிரியாணிக்கு என்று ஒரு தனி மவுசு உள்ளது.  குறிப்பாக பிரியாணிக்கென்று உலக பிரியாணிகள் தினம் என்று ஒரு நாளே கொண்டாடப்பட்டு வருவது பலரும் அறியாத விஷயமே.

   

அசைவ உணவு பிரியர்கள் யாரை கேட்டாலும் பிரியாணியின் மகிமையை எடுத்து கூறிக் கொண்டே இருப்பார்கள் அப்படி மக்கள் மனதில் இடத்தை பெற்றுள்ளது இந்த பிரியாணி . இந்நிலையில் swiggy ல் அதிகம் ஆர்டர் செய்யப்பட்ட உணவுகளில் 8 ஆண்டுகளாக பிரியாணி முதலிடத்தில் உள்ளதாக தற்பொழுது அந்தநிறுவனம் அறிவித்துள்ளது.

ஸ்விக்கியில் அதிகம் ஆர்டர் செய்யப்பட்ட உணவுகளில் பிரியாணி தொடர்ந்து முதலிடத்தில் பிடித்து வருகிறது என்றும்,  நடப்பாண்டில் நொடிக்கு 3 பிரியாணிகள் ஆர்டர் செய்யப்பட்டதாகவும்,  6 சிக்கன் பிரியாணிகள் ஆர்டருக்கு மத்தியில் ஒரு வெஜ் பிரியாணி ஆர்டர் செய்யப்பட்டது எனவும் swiggy தெரிவித்துள்ளது.

ஜனவரி 1ம் தேதி புத்தாண்டை 4.5 லட்சம் பேர் பிரியாணி ஆர்டர் கொடுத்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது. ஆர்டர் செய்யப்பட்ட உணவுகளில் தொடர்ந்து 8-வது வருடமாக பிரியாணி முதலிடத்தை பிடித்திருப்பது உணவு பிரியர்களை மகிழ்ச்சி அடையச் செய்துள்ளது.

Continue Reading

More in NEWS

To Top