Connect with us

CINEMA

சேற்றை உடல் முழுவதும் பூசிக் கொண்டு டயலாக் உடன் நடிகர் கருணாஸ் வெளியிட்ட புகைப்படம்.. என்ன சொல்லிருக்காரு பாருங்க..

தமிழ் சினிமாவின் முன்னணி காமெடி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் கருணாஸ். இவர் நடிகர் மட்டுமல்ல .ஒரு இசையமைப்பாளரும் கூட. அது மட்டும் இல்லாமல் இவர் தமிழக அரசியலிலும் களமிறங்கி கலக்கியவர். சூர்யா நடிப்பில் வெளிவந்த ‘நந்தா’ படத்தில் ‘லொடுக்கு பாண்டி’ என்ற கதாபாத்திரத்தின் மூலம் தான் கருணாஸ் சினிமா உலகில் அறிமுகமானார். இத்திரைப்படத்தில் அவரது கதாபாத்திரம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது .

   

இதைத் தொடர்ந்து வில்லன், புதிய கீதை ,திருமலை, குத்து, பிதாமகன், திருடா திருடி உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்துள்ளார். மேலும்  திண்டுக்கல் சாரதி, அம்பாசமுத்திரம் அம்பானி, சாந்த மாமா போன்ற திரைப்படங்களில் ஹீரோவாகவும் நடித்துள்ளார். தற்பொழுது இவர் பல்வேறு திரைப்படங்களில் கமிட்டாகி குணச்சித்திர  கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்.

கருணாஸ் பாடகி கிரேஸ் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். கிரேஸ் சினிமாவில் பாடியுள்ளார். இவர் அதிகம் தன் கணவர் நடித்த படங்களில் தான் பாடியிருக்கிறார். பின் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி நிறைவடைந்த   ‘கலக்கப்போவது யாரு சாம்பியன்ஸ்’ காமெடி நிகழ்ச்சியில் நடுவராக இருந்தார்.

நடிகர் கருணாஸ் -கிரேஸ் தம்பதியினருக்கு ஒரு மகள் மற்றும் மகன் உள்ளனர். சோசியல் மீடியாவில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கக்கூடியவர் நடிகர் கருணாஸ். இவர் தற்பொழுது தனது இன்ஸ்டா பக்கத்தில் “மண் தான் மருத்துவம்.. மண்தான் உடலின் தத்துவம்” என்று கூறி சேற்றை உடல் முழுவதும் பூசிக்கொண்டு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இதோ அந்த பதிவு…

 

View this post on Instagram

 

A post shared by Karunaas (@sethukarunaas)

Continue Reading

More in CINEMA

To Top