Connect with us

CINEMA

50 நாள் – 16  கிலோ குறைக்க .. ஸ்லிம்மா சிக்குன்னு மாறுன நடிகை ஆலியா மானசா சொன்ன சீக்ரெட்… என்னென்னு தெரியுமா..?

விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘ராஜா ராணி ‘சீரியல் மூலம் நடிகையாக களமிறங்கியவர் நடிகை ஆலியா மானசா. இத்தொடரின் மூலம் இவர் மக்கள் மத்தியில் மிகப் பிரபலமானார்.  இதை தொடர்ந்து இத்தொடரில் தனக்கு ஜோடியாக நடித்த நடிகர் சஞ்சீவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இத்தம்பதியினருக்கு தற்பொழுது ஐலா, அர்ஷ்  என்று இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

   

ராஜா ராணி சீசன் 1 வெற்றியை தொடர்ந்த ராஜா ராணி 2 தொடர் எடுக்கப்பட்டது. இத்தொடரிலும் ஹீரோயினாக நடிகை ஆலியா மானசாவே நடித்து வந்து கொண்டிருந்தார். இரண்டாவது குழந்தை கர்ப்பமாக அந்த சீரியலை விட்டு விலகிய இவர், தற்பொழுது குழந்தை பிறந்து பத்து மாதங்களுக்கு மேல் ஆவதால் சின்னத்திரையில் மீண்டும் அதிரடியாக களமிறங்கியுள்ளார்.

இவர் தற்பொழுது தனது உடல் எடையை வெகுவாக குறைத்து பழைய லுக்கிற்குத்  திரும்பி பிஸியாக நடித்துக் கொண்டு வருகிறார். ஆனால் விஜய் டிவியில் அல்ல, சன் தொலைக்காட்சியில். ஆம் இவர் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ‘இனியா’ சீரியலில் கதாநாயகியாக களமிறங்கி அசத்தி வருகிறார். இந்த சீரியல் தற்போது மக்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு பெற்று வருவதும் குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இரண்டாவது குழந்தைக்கு பிறகு கொழுகொழுவென இருந்த நடிகை ஆலியா மானசா 50 நாளில் 16 கிலோ வரை தனது எடையை குறைத்தாராம். அதாவது இவர் கூறியதாவது ‘ ரன்னிங் , வாங்கிக் செல்வது, கடுமையான உடற்பயிற்சி செய்வது, தினமும் காலையில் எழுந்தவுடன் சீரகத்தண்ணீர் மற்றும் தேன் கலத்த சுடுதண்ணீர் குடிப்பதால் பெருமளவு உடல் எடையை குறைக்க முடியும் என்றும், தன்னால் உடல் எடையை குறைக்க முடியும் என்ற நம்பிக்கையோடும் உறுதியோடும் அவர் இந்த முயற்சியில் இறங்கியதால் அவரால் சீக்கிரமாகவே உடல் எடையை குறைக்க முடிந்ததாக’ கூறியுள்ளார்.

Continue Reading

More in CINEMA

To Top