தமிழ் சினிமாவில் முக்கிய குணச்சித்திர நடிகர்களில் ஒருவராக வலம் வரும் நடிகர் பிரேம்குமாரின் சிறுவயது புகைப்படம் இணையத்தில் வெளியாகியுள்ளது. இவர் வெள்ளித்திரை, சின்னத்திரை என இரண்டிலும் கால்பதித்து கலக்கி வருகிறார். இவர் ராம்நாட்டின் ராஜாவான சண்முக ராஜேஸ்வர சேதுபதியின் பேரனாக இருந்தாலும் தனக்கு நடிப்பின் மீது இருந்த ஆர்வத்தின் காரணமாக கே பாலச்சந்தர் தயாரித்த சமுத்திரக்கனி இயக்கிய ‘அண்ணி’ என்ற சீரியலின் மூலம் சின்னத்திரையில் அறிமுகமானார்.

இதைத்தொடர்ந்து அவருக்கு கருணாநிதியால் ‘கண்ணம்மா’ எனும் திரைப்படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.இத்திரைப்படத்தை தொடர்ந்து தற்பொழுது வரை பல்வேறு திரைப்படங்களில் குணச்சித்திர கதாபத்திரங்களில் நடித்துள்ளார். தற்பொழுது இவர் வெள்ளித்திரையில் பிஸியான நடிகர்களில் ஒருவராக வலம் வந்து கொண்டுள்ளார்.

நடிப்பதில் மட்டுமல்ல தனது குடும்பத்தின் மீது அதிக பாசத்தை வைத்திருப்பவர் நடிகர் பிரேம்குமார். இவருக்கு திருமணமாகி இரண்டு மகன்கள் உள்ளனர். சோசியல் மீடியாவில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்க கூடியவர் நடிகர் பிரேம் குமார். இவர் அவ்வப்பொழுது தன்னுடைய குடும்பத்தோடு இருக்கும் புகைப்படங்களை இணையத்தில் பதிவு செய்து வருகிறார்.

அந்தவகையில் தற்பொழுது தனது அப்பாவுடன் இருக்கும் சிறுவயது புகைப்படத்தை இணையத்தில் பகிர்ந்து வெளியிட்டு உள்ளார். இப்புகைப்படமானது இணையத்தில் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது. இதோ அந்த புகைப்படம்…

