தல அஜித்திற்கு பிடித்த நடிகர், நடிகை இவுங்க தானாம்.. அவரே கூறிய சுவாரஸ்ய தகவல்… வைரலாகும் வீடியோ..

By Archana on மார்கழி 1, 2023

Spread the love

நடிகர் அஜித் படங்களில் நடிப்பது, பைக் ரைடு ஆகியவற்றை தாண்டி எந்தவொரு நிகழ்ச்சி அல்லது அவரின் பட ப்ரமோஷன் விழாவில் கூட பங்கேற்க மாட்டார். அவ்வளவு ஏன் இத்தனை ஆண்டுகளில் ஒரு சிறிய பேட்டி கூட கொடுத்தது கிடையாது. ஆரம்ப காலத்தில் மற்ற நடிகர்கள் போல் அஜித்தும் பேட்டிகளில் பங்கேற்றவர் தான். ஆனால் அவர் சில காரணங்களால் தற்போது அவர் இதுபோன்ற சில விஷயங்களை தவிர்த்து வருகிறார். இந்நிலையில் நடிகர் அஜித்தின் பழைய வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.

   

அதில் ஒரு நடிகராக உங்களுக்கு பிடித்த நடிகர் நடிகைகள் யார் என தொகுப்பாளர் அஜித்திடம் கேள்வி கேட்கிறார். அதற்கு பதிலளித்த அஜித், “சிவாஜி கணேசன் மற்றும் எம்ஜிஆர் குறித்து பேச எனக்கு வயது போதாது. அவர்களுக்கு அடுத்த தலைமுறையில் நடிப்பு என்று பார்த்தால் கமல் சார் பிடிக்கும். அதேபோல் ஸ்டைல் என்றால் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை அடித்து கொள்ள யாருமே இல்லை.

   

 

பிரபுதேவா டான்ஸ் மிகவும் பிடிக்கும். எனக்கு குறிப்பிட்டு இவர் தான் பிடிக்கும் என்று கிடையாது. ஒவ்வொருவரிடமும் ஒரு விஷயம் பிடிக்கும். அதேபோல் நடிகைகளில் ராதிகா மேம், ஊர்வசி மற்றும் ரேவதி ஆகியோர் சிறந்த நடிகைகள். நடிகர் மற்றும் நடிகைகள் என ஒவ்வொருவரிடமும் ஒரு திறமை உள்ளது. நான் அந்த திறமைக்கு மதிப்பளிக்கிறேன்” என கூறியுள்ளார்.

 

View this post on Instagram

 

A post shared by @filmviasams