80 90 காலகட்டங்களில் தொடர் படங்களில் நடித்து தமிழில் தனக்கென ஒரு இடத்தை பிடித்திருந்தார். 1983-ஆம் ஆண்டு இயக்குநர் பாக்யராஜ் இயக்கி,நடித்த முந்தானை முடிச்சு திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர் நடிகர் தவக்களை.முந்தானை முடிச்சு திரைப்படத்தில் அவரின் நடிப்பு நல்ல வரவேற்பை பெற்றது.

இதனைத் தொடர்ந்து பல்வேறு நகைச்சுவை கதாபாத்திரங்கள் அவருக்கு கிடைத்து வந்தது.இவர் கடைசியாக அபூர்வ தீவு என்ற திரைப்படத்தில் தான் நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. கிட்டத்தட்ட 500 படங்களுக்கும் மேல் நடித்து சினிமா உலகில் சிறப்பாக வந்தாலும் அவர் எடுத்த ஒரே ஒரு தவற முடிவால் அவரது வாழ்க்கையையே புரட்டிப் போட்டது.

அதாவது இவர் தான் சிறுக சிறுக சேர்த்து வைத்த காசை வைத்து ஒரு வீட்டையும் வாங்கியிருக்கிறார். திடீரென ஷூட்டிங்கில் இருந்த ரஜினியை பார்க்க தவக்களை சென்றுள்ளார். இவரை பார்த்ததும் ரஜினி ஏதாவது உதவி கேட்க வந்திருப்பாரோ என்று கூட நினைத்துள்ளார். ஆனால் தவக்களை தான் ஒரு படம் தயாரிக்கப் போவதாகவும் அந்த பட விழாவை நீங்கள்தான் திறந்து வைக்க வேண்டும் என்றும் ரஜினியிடம் கூற கோபத்தில் கண்டபடி திட்டியிருக்கிறார் ரஜினி. திடீரென தவக்களை இப்படி ஒரு முடிவை எடுத்தது ரஜினியை கோபப்படுத்தியுள்ளது. அதனால் கோபத்தில் ‘கிளம்புங்கள்’ என்று சொல்லிவிட்டு சென்று விட்டார் என கூறப்படுகிறது.

அதாவது நடிகர் தவக்களை தனது மொத்த காசையும் போட்டு விஜயா புரொடக்ஷன் என்ற சினிமா தயாரிப்பு கம்பெனிக்கு தனது நண்பர்களுடன் சேர்ந்து ஆரம்பித்தார். இந்த கம்பெனி ‘மண்ணில் இந்த காதல்’ என்ற திரைப்படத்தை தயாரித்து இருந்தது .ஆனால் திரைப்படம் வெளிவந்து படுதோல்வி அடைந்ததால் தனது சொத்துக்கள் அனைத்தையும் இழந்ததோடு சொந்த வீட்டையும் விற்க வேண்டிய நிலைமைக்கு தள்ளப்பட்டார். இதையெல்லாம் முன்பே அறிந்த ரஜினிகாந்த் அவரை எச்சரித்தும் அவர் அதை கேட்காமல் செயல்பட்டுள்ளார். இப்படத்தின் தோல்விக்கு பிறகு சினிமாவில் இவர் காணப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. இவர் 2014 ல் தனது வீட்டில் மாரடைப்பு காரணமாக காலமானார்.
