பெற்றோரை மிரட்ட லட்டர் எழுதி காணாமல் போன விஜய்.. கரெக்ட்டாக ஸ்கெட்ச் போட்டு தூக்கிய தந்தை SAC ..

By admin on கார்த்திகை 22, 2023

Spread the love

நடிகர் விஜய் இன்று தமிழ் சினிமாவில் டாப் ஸ்டார்களில் ஒருவர். தமிழ் சினிமாவில் அதிக வசூல் மன்னன், ரஜினியை காட்டிலும் இப்போதைக்கு விஜய்தான். ஆனால், அவரது இளமை காலத்தில் சினிமாவுக்குள் வர அவர் எடுத்த முயற்சிகள் குறித்து விஜய் பெற்றோர் எஸ்ஏ சந்திரசேகர், ஷோபா சந்திரசேகர் ஒரு நேர்காணலில் கூறியதாவது, சினிமாவில் விஜய் நடிக்க வேண்டும் என ஆசைப்படுவது ஒரு கட்டத்தில் எங்களுக்கு தெரிய வந்தது. ஆனால் அவர் பெரிய டாக்டராக வேண்டும். பெரிய மருத்துவமனை கட்டித் வேண்டும் என நாங்கள் ஆசைப்பட்டோம். ஆனால், அவருக்கு படிப்பதை விட நடிப்பதில் அதிக ஆர்வம் இருந்தது. சினிமாவில் போட்டி அதிகம். ஷூட்டிங்கில் நிறைய சிரமங்கள் இருப்பதால், அது வேண்டாம் என, விஜய் மீதுள்ள அக்கறையால் சொன்னோம்.

 Actor Vijay

   

ஒருமுறை, வீட்டில் இருந்த டைனிங் டேபிளில் ஒரு வெள்ளைத்தாளில் எழுதிய கடிதம் இருந்தது. அதில், நான் வெளியே போகிறேன். என்னைத் தேடாதீர்கள் என விஜய் எழுதி வைத்துவிட்டுச் சென்றுவிட்டார். அவன் உதயம் தியேட்டரில்தான் படம் பார்த்துக்கொண்டு இருப்பான் என, உடனே அவர் சைக்கிளை எடுத்துக்கொண்டு போய், உதயம் தியேட்டரில் படம் பார்த்துக்கொண்டிருந்த விஜயை வீட்டுக்கு கூட்டி வந்துவிட்டார். இங்கேயாவது என்னை நிம்மதியாக இருக்க விட மாட்டீங்களா என அப்பாவிடம் கேட்டிருக்கிறார் விஜய். அந்த படம் பிரபு, குஷ்பு நடித்த கிழக்குகரை படம். அதற்கு பிறகுதான், சினிமாவில் அவரது ஆர்வத்தை நாங்கள் புரிந்துக்கொண்டோம்.

   

 Actor Vijay

 

அதற்கு பிறகு, விஜயை ஸ்டுடியோவுக்கு கூட்டீட்டு போய் நிறைய போட்டோஸ் எடுத்து, அந்த ஆல்பத்தை பல பெரிய இயக்குநர்களிடம் காட்டி, என் பையனை வைத்து படம் எடுங்கள். நான் எவ்வளவு பணம் செலவானாலும் தயாரிப்பு செலவை ஏற்றுக்கொள்கிறேன் என்றேன். ஆனால் எந்த இயக்குநரும் படம் எடுக்க முன்வரவில்லை. நான் கமர்ஷியல் படம் எடுப்பவன் என்பதால், மற்ற இயக்குநர்களிடம் கேட்டேன். ஒரு கட்டத்தில் நீங்களே விஜயை வைத்து படம் எடுங்கள் என கூறினார். அதற்கு பிறகுதான் நாளைய தீர்ப்பு படத்தை இயக்கினேன். அதற்கு பிறகு அவர் நடிகரானார் என அவர்கள் கூறியிருக்கின்றனர்.