நடிகர் மன்சூர் அலிகான் கடந்த 2 நாட்களாக, சமூகவலைதளங்களில் முக்கிய பேசுபொருளாகி விட்டார். லியோ படத்தில் திரிஷாவுடன் நடிப்பதால் பெட்ரூம் சீன் இருக்கும் என எதிர்பார்த்தேன். டைரக்டர், திரிஷாவை கண்ணிலேயே காட்டவில்லை என காமெடியாக, வேடிக்கையாக பேசுவதாக நினைத்து, அவர் வில்லங்கமாக பேசியது இப்போது பெரிய விவகாரமாக மாறிவிட்டது. ஆனால், இந்த பிரச்னைக்கு மத்தியில், கடந்த 1998ம் ஆண்டில் நடந்த மன்சூர் அலிகான், பெண் உதவியாளர் கற்பழிப்பு வழக்கு குறித்த சம்பவம், சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.

கடந்த 1996ம் ஆண்டில், சிநேகா சர்மா என்ற 23 வயது பெண், மன்சூர் அலிகானிடம் பெண் உதவியாளராக பணிசெய்திருக்கிறார். அப்போது காரில் விடுதிக்கு காரில் அவரை அழைத்துச் சென்ற மன்சூர் அலிகான், ஜூஸில் மயக்க மருந்து கலந்துக்கொண்டு, மயக்கத்தில் இருந்த தன்னை பாலியல் பலாத்காரம் செய்துவிட்டதாக புகார் அளித்தார். மேலும், 1998ம் ஆண்டில் தனக்கு பெண் குழந்தை பிறந்ததாகவும், ஒன்றரை ஆண்டுகளாக திருமணம் செய்துகொள்வதாக கூறி, பலமுறை தன்னை மன்சூர் அலிகான் பாலியல் பலாத்காரம் செய்ததாகவும் சிநேகா சர்மா புகார் அளித்தார். அதன்படி 1998ம் ஆண்டில் டிசம்பர் 11ம் தேதி, மன்சூர் அலிகான் கைது செய்யப்பட்டுள்ளார். இது அப்போதைய செய்திதாள்களில் வந்துள்ளது.

கோர்ட் விசாரணைகளுக்கு பிறகு 2001, மார்ச்சில் மன்சூர் அலிகானுக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை, 3 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. சென்னை முதன்மை செஷன்ஸ் விதித்த தீர்ப்பை எதிர்த்து, சென்னை உயர்நீதிமன்றத்தில் மன்சூர் அலிகான் மேல்முறையீடு செய்திருக்கிறார். அங்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை ரத்து செய்யப்பட்டு, இழப்பீடாக சிநேகா சர்மாவுக்கு ரூ. 3.5 லட்சம், பெண் குழந்தைகளுக்கு ரூ. 7 லட்சம் செலுத்த அந்த கோா்ட் மன்சூர் அலிகானுக்கு உத்தரவிட்டுள்ளது. இதை எதிர்த்து, சுப்ரீம் கோர்ட்டை மன்சூர் அலிகான் நாடிய நிலையில் அவரது மேல்முறையீட்டை சுப்ரீம் கோர்ட் தள்ளுபடி செய்தது. இப்படி அந்த வழக்கு தொடர்ந்து போயிருக்கிறது. இப்படி கற்பழிப்பு வழக்கையே சந்தித்த மன்சூர் அலிகானுக்கு இந்த திரிஷா விவகாரம் எல்லாம், ரொம்ப சாதாரணமப்பா என்கின்றனர் விவரம் தெரிந்த சினிமா வட்டாரத்தினர்.
