என்னது.., நிஜ நீலாம்பரியே இவுங்க தானா..? படையப்பா படம் பார்த்துட்டு முதல்வர் ஜெயலலிதா சொன்ன வார்த்தை..

By admin on கார்த்திகை 21, 2023

Spread the love

தமிழகத்தில் முதல்வராக ஜெயலலிதா இருந்த காலகட்டத்தில்தான், இயக்குநர் கேஎஸ் ரவிக்குமார் இயக்கத்தில், ரஜினிகாந்த் நடித்த படையப்பா படம் வெளியானது. இந்த படத்தின் தயாரிப்பாளர் ரஜினிதான். தன் நண்பர்களின் பெயரில் தயாரித்த படம் இது. ஜெயலலிதாவுக்கு ரஜினிகாந்த் படங்களை பார்க்க பிடிக்கும். இந்த படத்தில் ரஜினியை எதிர்க்கும் ஒரு வில்லத்தனமாக நீலாம்பரி கேரக்டரில் ரம்யாகிருஷ்ணன் நடித்திருப்பார். அந்த பிடிவாதம், கோபம் எல்லாமே ஜெயலலிதாவின் குணங்களை பிரதிபலிப்பதாகவே இருந்தது.

Rajinikanth

   

படையப்பா படத்தை ஜெயலலிதா பார்த்தது குறித்து ஒரு நேர்காணலில் படத்தின் இயக்குநர் கேஎஸ் ரவிக்குமார் கூறியதாவது, ஆல்பர்ட் தியேட்டரில் இருந்து சிஎம் வீட்டுக்கு படையப்பா பிரிண்ட் போயிருக்கிறது. வீட்டில் உள்ள பிலிம் புரொஜெக்டர் தியேட்டரில் ஜெயலலிதா படம் பார்த்துவிட்டார் என்ற தகவல் வருகிறது. எனக்கு பக்கு பக்குன்னு இருக்கிறது. ஆனால், மறுநாள் வரை அங்கிருந்து எந்த போனும் வரவில்லை. ஏனென்றால் படையப்பா நீலாம்பரி கேரக்டர் அப்படியே ஜெயலலிதா இன்ஸ்பிரேஷனில் எடுத்தது. படத்தை பத்தி என்ன சொல்ல போறாங்களோன்னு ஒரே பயமா இருந்தது.

   

Rajinikanth

 

அடுத்த நாள் ரஜினிகாந்த் வீட்டுக்கு போன் செய்து கேட்டேன். ஜெயலலிதா படம் பார்த்துட்டாங்க. படையப்பா படம் சூப்பராக இருக்குதுன்னு சொல்லியிருக்காங்க. இதுல நீலாம்பரி கேரக்டர் ரொம்ப ஹைலைட்டாக இருக்குது. தன்னை போல ஒரு பவர்புல்லான லேடியை காட்டின ஒடனே அதுல அவங்களுக்கு ரொம்ப பிடிச்சு போச்சு, என்று கூறியிருக்கிறார் டைரக்டர் கேஎஸ் ரவிக்குமார்.