Connect with us

CINEMA

47 வயதிலும் அதே அழகில் ஜொலிக்கும் நடிகை மீனா… திருஷ்டி சுத்தி போடும் ரசிகர்கள்… லேட்டஸ்ட் கிளிக்ஸ்…

தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பின்னர் கதாநாயகியாக மாறியவர் நடிகை மீனா.  ரஜினி, அஜித், விஜய் என முன்னணி ஹீரோக்களுடன் இணைந்து நடித்து தமிழின் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வந்தவர் நடிகை மீனா. இவர் நடிப்பின் உச்சத்தில் இருக்கும் பொழுதே வித்யாசாகர் என்ற தொழிலதிபரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு நைனிகா என்ற மகளும் உள்ளார்.

 

   

தனது குடும்ப வாழ்வை மகிழ்ச்சியாக வாழ்ந்து கொண்டிருந்த மீனாவின் வாழ்க்கையில் திடீரென புயல் வீசியது. கொரோனா காலகட்டத்தில் அவரது கணவர் வித்தியாசாகர் நுரையீரல் தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார். தனது கணவரின் உயிரிழப்பால் மிகப்பெரும் துயரத்தை அடைந்தார் நடிகை மீனா.

தற்பொழுது தான் இவர் மெல்ல மெல்ல தனது கணவரின் மரணத்திலிருந்து மீண்டு வந்து கொண்டுள்ளார். இதை தொடர்ந்து நடிகை மீனா தற்பொழுது சினிமாவில் கவனம் செலுத்த தொடங்கியுள்ளார்.  தற்போது இவர் ஜெய ஜோஸ் ராஜ் என்ற மலையாள இயக்குனரின் படத்தில் நடித்து வருகிறார்.

சோசியல் மீடியாவில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்க கூடியவர் நடிகை மீனா. இவர் தற்பொழுது தனது லேட்டஸ்ட் புகைப்படங்களை இணையத்தில் பகிர்ந்துள்ளார். இப்புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் ’47 வயதிலும் அதே அழகில் ஜொலிக்கிறீங்களே’ என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.

Continue Reading

More in CINEMA

To Top