காதல், சண்டை, மோதல், தல்லு முல்லு… இதெல்லாமே நடிப்பு, ஸ்கிரிப்ட் தான்.. பிக் பாஸ் நிகழ்ச்சியை பற்றி புட்டு புட்டு வைக்கும் பிரபலம்..

By admin on கார்த்திகை 16, 2023

Spread the love

விஜய் டிவியில் பிக்பாஸ் சீசன் 7 இப்போது 45 நாட்களை கடந்து ஓடிக்கொண்டு இருக்கிறது. இந்த பிக்பாஸ் நிகழ்ச்சி குறித்து, ஜர்னலிஸ்ட் கார்த்திக் பிள்ளை என்பவர் ஒரு நேர்காணலில் கூறியிருப்பதாவது, பிக்பாஸ் நிகழ்ச்சியை பொருத்தவரை எல்லாமே ஸ்கிரிப்ட் தான். அந்த வீட்டுக்குள்ள போயிட்டு வந்த ஒரு பொண்ணும், பையனும் என் நண்பருக்கு மிகவும் தெரிந்தவர்கள். அந்த பையனும், பெண்ணும் அந்த பிக்பாஸ் வீட்டுக்குள் நெருக்கமாக இருந்து காதலித்தவர்கள். ஆனால், இப்போது வேறு பெண்ணை அந்த பையனும், வேறு பையனை அந்த பெண்ணும் திருமணம் செய்து கொண்டுள்ளனர்.

 Bigg Boss House

   

இதுகுறித்து என் நண்பர், அவர்களிடம் தனித்தனியாக போன் செய்து கேட்ட போது, நான் வீட்டுக்குள் போகும்போதே இந்த பெண்ணை காதலிக்குமாறு கூறினர். அதே போல் அந்த பொண்ணும், இந்த பையனை காதலிக்க வேண்டும் என்று எனக்கு சொல்லி அனுப்பினர் என்று கூறியிருக்கின்றனர். இப்படி வீட்டுக்குள் நடப்பது எல்லாமே திட்டமிட்ட செயல்தான். அங்கு போட்டியாளர்கள் செய்யும் அழுகை, ஆர்ப்பாட்டம், சண்டை, எமோசனல் எல்லாமே ஸ்கிரிப்ட். ஆட்களை மாத்தி மாத்தி காதலிக்க சொல்லி, அதில் இருந்து கண்டென்ட் எடுத்து அதை பரபரப்பாக்கி டிஆர்பி ரேட்டிங்கை உயர்த்தி கொள்கின்றனர். பிக்பாஸ் துவங்கிய ஒரு மாதத்தில் ரூ. 600 கோடி வரை பிக்பாஸ்க்கு வருவாய் வருகிறது.

   

 Bigg Boss House

 

டிவி சீரியல் போல அப்பா, அம்மா, அண்ணன், தம்பி, காதல், மாமியார், மருமகள் போல உறவுகளுக்குள் வரும் பிரச்னைகளை, சண்டைகளை போலவே, பிக்பாஸ் வீட்டுக்குள் கண்டென்ட்களை உருவாக்கி சண்டையிட்டு கொள்கின்றனர். வாக்குவாதம் செய்கின்றனர். அங்கே இருப்பவர்களுக்கு ஒரு நாளைக்கு ரூ.20 ஆயிரம் முதல் ரூ. 50 ஆயிரம் வரை சம்பளம் தரப்படுகிறது.

எல்லாமே நாடகம், நடிப்பு, ஸ்கிரிப்ட் தான். 100 நாட்களில் எத்தனை நாட்கள் பிக்பாஸ் வீட்டுக்குள் இருப்போம் என்றே தெரியாதவர்கள், சின்ன சின்ன விஷயங்களுக்காக இத்தனை கேமராக்கள் முன்பு உண்மையில் சண்டையிட்டு கொள்வார்களா, அதுவும் இமேஜ் உள்ள நடிகர்கள், நடிகைகள் யோசிக்க மாட்டார்களா, இந்த யதார்த்தமான லாஜிக்கில் இருந்தே இது பித்தலாட்ட நிகழ்ச்சி என்பது தெளிவாகிறது என கூறியிருக்கிறார் பத்திரிகையாளர் கார்த்திக் பிள்ளை.