சன் டிவியில் ஏராளமான சீரியல்கள் ஒளிபரப்பாகி கொண்டு வருகிறது.அதில் கடந்த 8 ஆண்டுகளுக்கும் மேலாக ஒளிபரப்பாகி சமீபத்தில் முடிந்த ஒரு சீரியல் தான் ‘சந்திரலேகா’. இந்த சீரியலில் சந்திரா என்ற கதாபாத்திரத்தில் நடித்துக் கொண்டிருந்தவர் தான் நடிகை ஸ்வேதா பண்டேகர்.

இவர் சீரியலில் நடிப்பதற்கு முன்பு சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார். இவர் ஆழ்வார், இதயம், திரையரங்கம், வள்ளுவன் வாசுகி உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்திருக்கிறார். ஒரு கட்டத்தில் பட வாய்ப்புகள் இல்லாததால் சினிமாவை விட்டு ஒதுங்கிய இவர் சீரியல்களில் நடிக்கத் தொடங்கினார்.

நடிகை ஸ்வேதா சன் மியூசிக் தொலைக்காட்சி தொகுப்பாளர் மால் முருகன் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு சமீபத்தில் இரண்டு அழகான இரட்டை குழந்தைகள் பிறந்தது. ஒரு ஆண் குழந்தை மற்றும் ஒரு பெண் குழந்தை.

சோசியல் மீடியாவில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்க கூடியவர் நடிகை ஸ்வேதா. இவர் தற்பொழுது தனது கணவர் மற்றும் அழகிய இரட்டைக்குழந்தைகளுடன் இணைந்து தீபாவளியை கொண்டாடியுள்ளார். மேலும் அவர் தனது குழந்தைகள் மற்றும் கணவருடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தையும் பதிவிட்டு ரசிகர்களுக்கு தீபாவளி வாழ்த்துக்களை கூறியுள்ளார். இதோ அந்த பதிவு…
View this post on Instagram
