60 கோடி பட்ஜெட் படத்துல நடிக்க.. 20 கோடி சம்பளம் கேட்க்கும் லவ்டுடே பிரதீப் ரங்கநாதன்.. அதிர்ந்துபோன தயாரிப்பு நிறுவனம்..

By admin on கார்த்திகை 13, 2023

Spread the love

நீண்ட நாட்களாக படத்தை இயக்கும் வாய்ப்பின்றி தவித்து வருகிறார் டைரக்டர் விக்னேஷ் சிவன். நயன்தாரா பிஸியாக அடுத்தடுத்த படங்களில் நடித்துக் கொண்டிருக்க அவரது கணவர் விக்னேஷ் சிவன், நேரத்தை போக்க பாட்டெழுதிக் கொண்டு இருக்கிறார். இந்நிலையில், ராஜ்கமல் படத் தயாரிப்பு நிறுவனம் சார்பில் லவ்டுடே நாயகன் பிரதீப் ரங்கநாதன் ஹீரோவாக நடிக்கும் படத்தை இயக்க முடிவானது. ஆனால் படத்தின் பட்ஜெட் ரூ. 60 கோடி என்பதை குறைக்க சொல்லி, தயாரிப்பு நிறுவனம் கேட்க, அது முடியாது என இயக்குநர் விக்னேஷ் சிவன் மறுத்துவிட, அந்த படத்தை தயாரிக்கவில்லை என கமல் பட நிறுவனம் ஒதுங்கி கொண்டது.

Vignesh Sivan

   

இந்த படத்தின் பட்ஜெட்டின் மொத்த மதிப்பு ரூ. 60 கோடி, இதில் டைரக்டர் விக்னேஷ் சிவன் ரூ. 10 கோடி, படத்தின் நாயகன் ரூ. 20 கோடி என்பதுதான் முடிவு. லவ்டுடே வெற்றிக்கு பிறகு, ரூ. 20 கோடி சம்பளம் என முடிவாக பிரதீப் ரங்கநாதன் கூறியதால், 10க்கும் மேற்பட்ட தயாரிப்பு நிறுவனங்கள் பின்வாங்கி விட்டன. அதில் கமல் பட நிறுவனமும் ஒன்று. ஒரே ஒரு படம் ஹிட் கொடுத்த பிரதீப், இரண்டாம் நிலை கதாநாயகனாக இருந்துக்கொண்டு ரூ. 20 சம்பளம் கேட்பதை தமிழ் சினிமா தயாரிப்பாளர்கள் அதிர்ச்சியாக பார்க்கின்றனர்.

   

ஆனால், அதுதான் தனது சம்பளம் என்பதில் தீர்மானமாக இருக்கிறார் பிரதீப். இதற்கு டைரக்டர் விக்னேஷ் சிவனும் சம்மதித்துள்ளார். ஆனால், தயாரிப்பு நிறுவனங்கள் பிரதீப்புக்கு ரூ. 20 கோடி சம்பளம் தர மறுப்பதால் படத்தை இயக்க முடியாமல் பாதிக்கப்படுவதும் விக்னேஷ் சிவன்தான்.

 

Vignesh Sivan

இந்நிலையில், லியோ படத்தை தயாரித்த லலித்குமார் இந்த படத்தை தயாரிக்க சம்மதம் தெரிவித்து இருக்கிறார். ஏற்கனவே காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தை தயாரித்த வகையில் லலித்குமாருக்கும், விக்னேஷ் சிவனுக்கும் பிரச்னை ஏற்பட்டது. ஆனால் இப்போது லியோவுக்கு பிறகு வேறு படம் கைவசம் இல்லாததால், இதற்கு லலித்குமார் சம்மதித்து இருப்பதாக கூறப்படுகிறது.

ஆனால், இன்னும் பேச்சுவார்த்தை தான் நடந்து வருகிறது. இன்னும் அக்ரிமென்ட் எழுதவில்லை என்றும் கூறப்படுகிறது. லியோ படத்தில் ரூ. 100 கோடி லாபம் கிடைத்திருப்பதால், தயாரிப்பாளர் லலித்குமார் இந்த படத்தை தயாரிக்க வாய்ப்பு அதிகம் என்றே தெரிகிறது. ஆனால் லவ்டுடே என்ற ஒரே வெற்றி படத்தை தந்துவிட்டு, ரூ. 20 கோடி தனது சம்பளம் என நிர்ணயித்த பிரதீப் ரங்கநாதனை தான் பலரும் பயங்கர ஆளுப்பா நீ, என கலாய்த்து வருகின்றனர்.