24 மாதங்கள் இந்த பெண்ணோடு.. Thank You பொண்டாட்டி… மனைவி ஷாபனாவுடன் ஆர்யன் வெளியிட்ட ரொமான்டிக் போஸ்ட்..

By Begam on கார்த்திகை 12, 2023

Spread the love

தமிழ் சின்னத்திரையில் பிரபலமான சீரியல் நடிகைகளில் ஒருவர்தான் நடிகை ஷபானா. சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் தனது க்யூட்டான சிரிப்பால் தனக்கென ஒரு இடத்தை பிடித்து பிரபலமானவர். ஜீ தமிழில் ஆயிரம் எபிசோடுக்கு மேல் ஒளிபரப்பான செம்பருத்தி சீரியல் கடந்த ஆண்டு நிறைவு பெற்றது. இல்லத்தரசிகள் மற்றும் இளைஞர்களால் அதிகம் ரசிக்கப்பட்ட இந்த சீரியல் கிட்டத்தட்ட ஐந்து வருடங்கள் ஒளிபரப்பான நிலையில் கடந்த 2022 ஆம் ஆண்டு நிறைவு பெற்றது.

   

இந்த சீரியலில் பார்வதி என்ற கதாபாத்திரத்தில் நடித்த ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர்தான் நடிகை ஷபானா. மேலும் விஜே அக்னி மற்றும் பிரியாராமன் உள்ளிட்ட பலர் இந்த சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர்.  இந்த சீரியலில் நடித்து ரசிகர்களை கவர்ந்த ஷபானா சீரியல் நடிகர் ஆர்யனை கடந்த வருடம் திருமணம் செய்து கொண்டார்.

   

 

திருமணத்திற்கு பிறகு இவர் மீண்டும் சீரியலில் நடிப்பார் என ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்த நிலையில் தற்பொழுது இவர் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் மிஸ்டர் மனைவி என்ற சீரியலில் நடித்து வருகிறார். சோசியல் மீடியாவில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்க கூடியவர் ஷபானா. இவர் அவ்வப்பொழுது தனது கணவருடன் எடுத்துக் கொள்ளும் கியூட் புகைப்படங்களை இணையத்தில் பகிர்ந்து வருகிறார்.

இந்நிலையில் இன்று ஆர்யன் ஷபானா ஜோடி தங்களது இரண்டாவது திருமண நாளை சொகுசு விடுதி ஒன்றில் ரொமான்டிக்காக கொண்டாடியுள்ளனர். இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வெளியாக ரசிகர்களும் தங்களது வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.