தமிழ் திரை உலகில் முன்னணி நடிகரான சிவகார்த்திகேயன் ஏராளமான படங்களில் நடித்துள்ளார். இவர் நடித்த அயலான் படம் பொங்கலுக்கு ரிலீசாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் சிவகார்த்திகேயன் பற்றி பல விமர்சனங்கள் சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது.

அதிலும் சிவகார்த்திகேயனுக்கும், இமானுக்கும் இடையே உள்ள பிரச்சனை காரணமாக சிவகார்த்திகேயன் மீது இருந்த மரியாதை ரசிகர்களுக்கு குறைந்ததாகவே தெரிகிறது. சிவகார்த்திகேயன் துரோகம் பண்ணிவிட்டதாகவும், அவர் படங்களுக்கு இனிமேல் இசையமைக்க மாட்டேன் எனவும் இமான் ஏற்கனவே கூறியிருந்தார்.

இந்த பிரச்சனை பூதாகரமாக வெடித்தும் சிவகார்த்திகேயன் எந்த பதிலும் அளிக்காமல் மௌனமாக இருந்தார். இது ஒருபுறம் இருக்க ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் சாய்பல்லவி நடிக்கும் படத்தின் ஷூட்டிங் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த படத்தை கமலின் ராஜ் கமல் நிறுவனம் தயாரிக்கிறது.

ஷூட்டிங்கில் பிஸியாக இருந்த சிவகார்த்திகேயன் தன் மீது வைத்த விமர்சனங்களுக்கு கூட பதில் அளிக்காமல் மௌனமாக இருந்தார். இந்நிலையில் நேற்று உலகநாயகன் கமல்ஹாசன் தனது 69-ஆவது பிறந்த நாளை விமர்சையாக கொண்டாடினார். அந்த நிகழ்ச்சியில் நடிகர் சிவகார்த்திகேயன் கலந்து கொண்டு கமல்ஹாசனுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது.

