தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களின் ஒருவராக வலம் வருபவர் நடிகர் கமலஹாசன். தற்பொழுது இவர் இயக்குனர் சங்கர் இயக்கத்தில் ‘இந்தியன் 2’ திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார் . விரைவில் இத்திரைப்படம் ரிலீஸாக உள்ளது. அதோடு மட்டும் இன்றி அரசியலிலும் மிகவும் முனைப்புடனும் செயல்பட்டு வருகிறார் நடிகர் கமலஹாசன். இதைத்தொடர்ந்து அவர் பல திரைப்படங்களிலும் கமிட்டாகி உள்ளது குறிப்பிடத்தக்கது. தற்பொழுது இவர் பிக் பாஸ் 7 நிகழ்ச்சியையும் தொகுத்து வழங்கி வருவதும் குறிப்பிடத்தக்கது.

இறுதியாக பிக் பாஸில் போட்டியாளர் பிரதீப்பை ரெட் கார்டு கொடுத்து வெளியேற்றினார். இதனால் தற்பொழுது பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி வருகிறார் கமலஹாசன். உலகநாயகன் நடிப்பில் கடைசியாக வெளிவந்த விக்ரம் மாபெரும் வெற்றியடைந்தது. இதை தொடர்ந்து தற்போது இந்தியன் 2, கமல் 233, கல்கி, கமல் 234 என பல படங்களை கைவசம் வைத்துள்ளார். இதில் கமல் ஹாசனின் 234 படத்தை மணி ரத்னம் இயக்குகிறார். இப்படத்திற்கு’ Thug life ‘ என பெயரிடப்பட்டு டைட்டில் கூட நேற்று வெளியானது.

இன்று நடிகர் கமலஹாசன் தனது 69 வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். தன்னுடைய பிறந்தநாளை முன்னிட்டு பர்த்டே பார்ட்டி ஒன்றை ஏற்பாடு செய்திருந்தார். இதில் பரிமாறப்படும் உணவுகளை, மதப்பட்டி ரங்கராஜன் தான் செய்திருந்தார். இந்த பர்த்டே பார்ட்டியில் “நூல் பரோட்டா, நீலகிரி சிக்கன் கிரேவி, நீலகிரி மஸ்ரூம் கிரேவி, கொங்கு ஸ்பெஷல் ஃபயர் வுட் மட்டன் தம் பிரியாணி, கொங்கு ஸ்பெஷல் மட்டன் தம் பிரியாணி, ரைத்தா,
View this post on Instagram
பொன்னி அரிசி சாதம், மட்டன் சிறுவாணி தண்ணி குழம்பு, மதுரை அயிரை மீன் குழம்பு, எலும்பு ரசம், பெப்பர் ரசம், குல்கந்து தயிர்,சிக்கன் ரேஷ்மி டிக்கா, மதுரை மட்டன் கோலா உருண்டை, நல்லம்பட்டி நாட்டுக்கோழி வறுவல், தென்னங்குருத்து பொரியல், மினி பரோட்டா பெப்பர் சாப்ஸ், பிச்சு போட்ட கோழி வறுவல், வெஜ் கோலா உருண்டை, வைலட் கேபேஜ் தோரான், நாகர்கோவில் அவியல், கேரளா அட பிரதாமன் பாயசம், அப்பளம் ஊறுகாய் போன்ற பல ஐட்டம்கள் இடம்பெற்றிருந்தது.

