இன்று கமல்ஹாசன் தனது 69-வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். பொதுவாக இந்த நாளில் சோசியல் மீடியாவில் பலரும் கமல்ஹாசனுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருவார்கள். ஆனால் இன்று அவருக்கு எதிரான கருத்துகள் தான் கிளம்பி கொண்டிருக்கிறது. அதற்கு முக்கிய காரணம் பிக் பாஸில் இருந்து பிரதீப் வெளியேற்றப்பட்டது தான்.

அது தனது முடிவு கிடையாது வீட்டில் இருக்கும் பெரும்பாலானோர் எடுத்த முடிவு என கமல் கூறினாலும் அதனை மக்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. அந்த அளவிற்கு பிரதீப் விவகாரம் பூதாகரமாக வெடித்தது. பிரதீப் மீண்டும் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு திரும்பி செல்ல வேண்டும் என ஆதரவு குரல்கள் எழுந்துள்ளது.

மேலும் கமல் செய்தது தவறு எனவும் பலர் கமெண்ட் செய்து வருகின்றனர். வீட்டில் இருப்பவர்களின் முடிவை மட்டுமே வைத்து பிரதீப் வெளியேற்றப்பட்டது நியாயம் கிடையாது. அதிலும் கமல் இது மக்கள் முடிவு என சேர்த்து சொன்னது தான் கொந்தளிக்க வைத்துள்ளது.

அதற்கு ஏற்றார் போல பிரதீப் வெளியேறுகிறார் எனக் கூறியதும் ஆடியன்ஸ் கைதட்டுவது போல காட்டியது அப்பட்டமான ஸ்கிரிப்ட் ஆக பார்க்கப்படுகிறது. இப்போது வரை கமலுக்கு எதிராக ரசிகர்கள் பல கேள்விகளை முன்வைத்து வருகின்றனர். பிக் பாஸ் வீட்டு பிரச்சனையை கமல்ஹாசன் கையாளும் விதம் எப்போதும் வியக்கத்தக்க வகையில் இருக்கும்.

அப்படி இருக்க இந்த முறை கமல் செய்தது யாருக்குமே பிடிக்கவில்லை. அனைத்து பிரச்சினைகளும் ஒருபுறம் இருக்க பிறந்தநாளை சிறப்பாக கொண்டாடி உள்ளார். அவருக்கு திரை பிரபலங்கள் பலரும் வாழ்த்து தெரிவித்தனர். இது தொடர்பான புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

