நடிகர் சிவகார்த்திகேயன் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருகிறார். துவக்கத்தில் விஜய் டிவியில் காம்பியராக இருந்த அவரை, மெரினா படம் மூலம், தமிழ் சினிமாவுக்கு அறிமுகப்படுத்தினார் இயக்குநர் பாண்டிராஜ். தொடர்ந்து வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன், சீமராஜா, காக்கிச்சட்டை, மனம் கொத்தி பறவை, நம்ம வீட்டுப்பிள்ளை படங்கள் மூலம், ரசிகர்களின் மனங்களில் இடம்பிடித்து முன்னணி நடிகராக மக்கள் மனங்களை கவர்ந்தார் சிவகார்த்திகேயன்.
இந்நிலையில், இசையமைப்பாளர் இமான் ஒரு நேர்காணலில், தனக்கு மன்னிக்க முடியாத ஒரு நம்பிக்கை துரோகத்தை சிவகார்த்திகேயன் என்று கூறிய பிறகு, அந்த விவகாரத்தால் சிவகார்த்திகேயன் இமேஜ், சரசர என சரிந்து வருகிறது. இதுகுறித்து அவர் எந்த பதிலும், விளக்கமும் இதுவரை தரவில்லை.

இந்நிலையில், அவரது அயலான் படம், பொங்கலுக்கு ரிலீஸ் செய்யப்பட இருக்கிறது. இந்த படத்துக்கு போட்டியாக பா. ரஞ்சித் இயக்கத்தில், சியான் விக்ரம் நடித்த தங்கலான் படத்தை அதன் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா களத்தில் இறக்குகிறார். இதுகுறித்து சினிமா பத்திரிகையாளர் ஜெஸ்மி அளித்துள்ள நேர்காணலில் கூறியதாவது, தன்னை கை தூக்கி விட்டவர்களை காலால் எட்டி உதைக்கும் குணம், சிவகார்த்திகேயனிடம் இருக்கிறது. தனுஷ். எஸ்கே மதன், ஆர்டி ராஜா, ஞானவேல் ராஜா, ராஜேஷ் என தன்னுடைய வளர்ச்சிக்கு உதவிய பல பேரை மதிக்காதவர்தான் சிவகார்த்திகேயன்.

மிஸ்டர் லோக்கல் படத்தை, தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா தயாரித்தார். அதுவரை ஒரு கோடி ரூபாய் சம்பளம் வாங்கிக் கொண்டிருந்த சிவகார்த்திகேயன் அந்த படத்துக்கு 10 கோடி ரூபாய் சம்பளம் கேட்டார். ரஜினி முருகன் படத்துக்கு பிரச்னை ஏற்பட்ட போது, அதை தீர்த்து வைத்தவரே, தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா தான்.

மிஸ்டர் லோக்கல் படம் ஷூட்டிங்குக்கு சரியாக போகாமல், சரியாக ஒத்துழைக்காமல் படத்தை தோல்வி படமாக மாற்றியவரே சிவகார்த்திகேயன் தான். அதனால்தான், இப்போது அதற்கு பழிதீர்க்கும் விதமாக, அயலான் படம் ரிலீஸ் ஆகும் நேரத்தில், தங்கலான் படத்தை ஞானவேல் ராஜா பொங்கல் பண்டிகைக்கு ரிலீஸ் செய்கிறார் என, கூறி இருக்கிறார் பிஸ்மி.
