‘ப்ளீஸ்.. அப்பாவை பற்றி வதந்திகளை பரப்பாதீங்க’… வேதனையுடன் பேட்டியளித்த மறைந்த நடிகர் ஜூனியர் பாலையாவின் மகன்.. (வீடியோ)

By Begam on கார்த்திகை 4, 2023

Spread the love

பழம்பெரும் நடிகர் டி.எஸ்.பாலையாவின் மகன் என்ற அடையாளத்தோடு வாரிசு நடிகராக திரையுலகில் அறிமுகமானவர் நடிகர் ஜூனியர் பாலையா. இவர்  ‘மேல்நாட்டு மருமகள்’ படத்தின் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். தொடர்ந்து, கோபுர வாசலிலே, கரகாட்டக்காரன், சின்னத்தாயி, சங்கமம், வின்னர், சாட்டை, புலி, நேர்கொண்ட பார்வை உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களில் நடித்திருந்தார்.

   

இரண்டு ஆண்டுகளுக்கு முன் வெளியான ‘என்னங்க சார் உங்க சட்டம்’ என்ற படத்தில் தான் அவர் கடைசியாக நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் ‘முகிலன்’ என்ற வெப் தொடரில் நடித்துள்ளார். சித்தி, சின்ன பாப்பா பெரிய பாப்பா உள்ளிட்ட சீரியல்களிலும் நடித்துள்ளார். வெள்ளித்திரை மட்டுமல்லாமல் சின்னத்திரையிலும் கால்பதித்து கலக்கியவர் நடிகர் ஜூனியர் பாலையா. இப்படி சின்னத்திரை வெள்ளித்திரை என அனைத்திலும் வலம் வந்த ஜூனியர் பாலையா மூச்சுத் திணறல் ஏற்பட்டு சென்னை வளசரவாக்கத்தில் உள்ள தனது இல்லத்தில் உயிரிழந்ததாக கூறப்பட்டது.

   

 

இவரது இறப்புக்கு திரையுலகை சேர்ந்த பலரும் இரங்கல் தெரிவித்து வந்தனர். இந்நிலையில் மறைந்த நடிகர் ஜூனியர் பாலையாவின் உடல் இன்று நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து அவரின் மகனான ரோஹித் பாலையா தற்பொழுது செய்தியாளர்களை சந்தித்து பேட்டி ஒன்றை கொடுத்துள்ளார். அந்த பேட்டியில் அவர் கூறியதாவது, ‘ அப்பாவின் மரணம் குறித்து சம்பந்தமில்லாத பல வதந்திகள் பரப்பப்பட்டு வருகிறது. அப்பாவிற்கு சில நாட்களாகவே மூச்சுத்திணறல் பிரச்னை இருந்து வந்தது.

நவம்பர் 2 அதிகாலை கொஞ்சம் அதிகமாக ஆனது. அவர் எழுந்து உட்காரும் பொழுதே , நிலைதடுமாறி கீழே விழுந்து விட்டார். அவரை நாங்கள் தூக்கும் பொழுதே அவரது உயிர் பிரிந்து விட்டது. அதன்பிறகு ஆம்புலன்ஸ் கால் செய்து கூப்பிட்டோம். அவர்கள் வந்து கன்போர்ம் செய்துவிட்டனர். அனால் உண்மையான காரணம் தெரியாமல் அப்பாவிற்கு மாரடைப்பு, இன்னும் இதுபோல நிறைய காரணங்களை கூறிக்கொண்டு வதந்திகள் பரவி வருகிறது. இதனால் மிகுந்த மனஉளைச்சலுக்கு ஆளாகியுள்ளோம். அப்பா மரணம் குறித்து தெளிவுபடுத்தவே இந்த பேட்டி என்றும் அவர் கூறியுள்ளார். இதோ அந்த வீடியோ…