![sreedivya (1) - Tamizhanmedia.net](https://tamizhanmedia.net/wp-content/uploads/2023/10/sreedivya-1.jpg)
CINEMA
‘என்னுடைய திருமணம் அப்படிதான் நடக்கும்’… முதன்முறையாக திருமணம் குறித்து மனம்திறந்த நடிகை ஸ்ரீதிவ்யா…
தமிழ் சினிமாவில் நடிகர் சிவகார்த்திகேயனுடன் இணைந்து வருத்தப்படாத வாலிபர் சங்கம் என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் பெருமளவில் பிரபலமானவர் நடிகை ஸ்ரீதிவ்யா. இப்படத்தில் இவரது நடிப்பு ரசிகர்களை பெருமளவில் கவர்ந்தது. இவருக்கென ஏராளமான ரசிகர்கள் உருவாகினர்.
மேலும் வருத்தப்படாத வாலிபர் சங்கம் திரைப்படம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்ற நிலையில் இவருக்கு ஏராளமான பட வாய்ப்புகள் குவிய துவங்கியது. மேலும் ஸ்ரீதிவ்யா ஜீவா, வெள்ளைக்காரதுரை, காக்கி சட்டை, பென்சில், பெங்களூரு நாட்கள், மருது, காஷ்மோரா, மாவீரன் கிட்டு என ஏராளமான திரைப்படங்களில் நடித்துள்ளார்
தெலுங்கில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான ஸ்ரீதிவ்யா ஏராளமான தெலுங்கு சினிமாக்களிலும் நடித்துள்ளார். மேலும் அவர் குடும்பப்பாங்கான கதாபாத்திரங்களிலேயே நடித்து வந்துள்ளார். 5 வருடங்களுக்கு மேலாக நடிகை ஸ்ரீதிவ்யா எந்த படத்திலும் கமிட்டாகாமல் இருந்து வந்தார். இதற்கான காரணம் என்னவென்று தெரியவில்லை. நீண்ட இடைவேளைக்கு பின்னர் தமிழில் தற்போது ‘ரெண்டு’ என்கிற படத்தில் நடித்துள்ளார்.
இந்த நிலையில் சமீபத்தில் கலந்து கொண்ட பேட்டி ஒன்றில் தனது திருமணம் குறித்து மனம் திறந்து பேசியுள்ளார். அதில் அவர் கூறியதாவது, ‘ எனக்கு கண்டிப்பாக காதல் திருமணம் தான். என்னுடைய காதலனை தான் திருமணம் செய்துகொள்வேன்’ என கூறியுள்ளார். ஆனால் அந்த காதலர் யார்? எப்போது திருமணம்? என்பதை பற்றியெல்லாம் அவர் தெரிவிக்கவில்லை.