பிரபல கவர்ச்சி நடிகையான பாபிலோனாவின் சகோதரர் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழ் திரையுலகில் பல திரைப்படங்களில் கவர்ச்சி படங்களில் நடித்தவர் பாபிலோனா. தமிழில் இவர் தை பொறந்தாச்சு, என்னம்மா கண்ணு, அசத்தல், என் புருஷன் குழந்தை மாதிரி உள்ளிட்ட திரைப்படங்களில் கவர்ச்சி கதாபாத்திரத்தில் நடித்தார்.

தமிழ் மட்டும் இல்லாமல் மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழிகளிலும் இவர் பல திரைப்படங்களில் நடித்திருக்கிறார். பின்னர் பட வாய்ப்பு குறைந்த பிறகு பிட்னஸ் ட்ரெய்னரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். தற்போது குடும்பம், கணவர், குழந்தை என சந்தோஷமாக வாழ்ந்து வருகிறார். இவரது சகோதரரான விக்கி மர்மமான முறையில் வீட்டிலிருந்து பிணமாக மீட்கப்பட்டுள்ளார்.

இவர் ஒரு ரவுடி என்பதால் முன்விரோதம் காரணமாக யாரேனும் கொலை செய்தார்களா? என்கின்ற சந்தேகம் எழுந்துள்ளது. இது தொடர்பாக காவல்துறையினர் தீவிரமாக விசாரணை செய்து வருகிறார்கள். மேலும் விக்கியின் தாயாரான மாயாவும் ஒரு நடிகை தான். அது மட்டும் இல்லாமல் பாபிலோனா இவரின் உடன்பிறந்த சகோதரி கிடையாது என்பதும் குறிப்பிடத்தக்கது.
