Connect with us

CINEMA

அட நம்ம கூல் சுரேஷ் மகனா இது?…. அப்படியே அப்பாவை போல இருக்காரே…. வைரலாகும் குடும்ப புகைப்படம்…!!!

தமிழ் சினிமாவில் படங்கள் வெளியாகும் முதல் நாள் திரையரங்குக்கு சென்று படத்தைப் பார்த்து விமர்சனத்தை கூறி பிரபலமானவர் கூல் சுரேஷ். தமிழ் சினிமாவில் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து வந்த இவர் முதன்முதலாக பிரசாந்த் நடிப்பில் வெளிவந்த சாக்லேட் என்ற திரைப்படத்தின் மூலமாக அறிமுகமானார்.

   

அதன் பிறகு காக்க காக்க, ஸ்ரீ, மச்சி, எம் குமரன் சன் ஆப் மகாலட்சுமி, தேவதையை கண்டேன் உள்ளிட்ட பல படங்களில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்தார். அது மட்டும் இல்லாமல் சந்தானத்தின் ஒரு சில திரைப்படங்களிலும் இவர் நடித்திருக்கின்றார். கலர் கலராக ஹேர் ஸ்டைல் காஸ்ட்யூம் போட்டு கலக்கி வந்த இவர் பின்னர் காமெடியனாக மாறிவிட்டார். ஆரம்பத்தில் பிஸியாக நடித்து வந்தாலும் பிறகு வாய்ப்புகள் குறைய தொடங்கியது.

இதனால் கிடைக்கும் கதாபாத்திரத்தில் நடித்த வந்தார். பிரபலங்களின் திரைப்படங்கள் திரையரங்குகளில் வெளியாகும் போது அதனைப் பார்த்துவிட்டு விமர்சனம் கூறி வருவார். சிம்புவின் பெரும்பாலான திரைப்படங்களை இவர் ஃப்ரீயாகவே பிரமோஷன் செய்து விடுவார். அது மட்டும் இல்லாமல் ஏதாவது ஒரு கருத்துக்களை சர்ச்சையாக கூறி சிக்கலில் மாட்டிக்கொள்வது இவரது வழக்கம்தான்.

தற்போது இவர் பிக் பாஸ் வீட்டிற்குள் சென்றிருக்கிறார். அங்கு மிகவும் சிறப்பாகவே விளையாடி வருகிறார் .இவரின் குடும்பத்தை பற்றிய தகவல் பெரும்பாலும் வெளியானது கிடையாது . ஆனால் அவர் பிக் பாஸ் என்ற பிறகு அவரது மனைவி மகன் மற்றும் அம்மா புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி இருக்கின்றது. அவரது மகன் பார்ப்பதற்கு அவரைப் போலவே இருக்கின்றார். இந்த புகைப்படங்கள் இதோ..

author avatar
Mahalakshmi
Continue Reading

More in CINEMA

To Top