வெறும் லிப்சிங் பண்றாங்க…. அது பெரிய துரோகம்…. A.R ரகுமான் கான்செர்ட்டில் உள்ளரசியல்…. டி.இமான் பேட்டி…!!!

By Mahalakshmi on ஐப்பசி 26, 2023

Spread the love

தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான இசையமைப்பாளர்களில் ஒருவராக வளம் வருபவர் டி இமான். இவர் சமீபத்தில் அளித்து வரும் பேட்டிகளானது தற்போது இணையத்தில் மிகவும் வைரலாகி வருகின்றது. அதிலும் அவர் சிவகார்த்திகேயன் பற்றி பல விஷயங்களை பேசி இருந்தார். அவர் தனக்கு செய்த துரோகத்தை மன்னிக்க மாட்டேன் மறக்க மாட்டேன். இந்த ஜென்மத்தில் அவருடன் சேர்ந்து படம் செய்வது என்பது இயலாத காரியம் என்று கூறியிருந்தார்.

   

இதை கேட்ட பலரும் அப்படி இவர்களுக்குள் என்னதான் சண்டை நடந்தது என்று கேட்டு வருகிறார்கள். மேலும் சினிமா பத்திரிகையாளர்கள் இவர்கள் இருவருக்குள் இதுதான் நடந்தது என்று கூறி பல புரளிகளையும் கிளப்பி விட்டு வருகிறார்கள். ஆனால் எது உண்மை என்பது அவர்கள் கூறினால் மட்டுமே தெரியும். தொடர்ந்து இன்டர்வியூ அளித்து வரும் இமான் மீண்டும் ஒரு புது உண்மையை கூறியிருக்கிறார்.

   

 

அதாவது லைவ் கான்செப்ட்களில் நடக்கும் உள்அரசியல்களை அவர் வெளிப்படையாக பேசி இருந்தார். பொதுவாக பெரிய பெரிய இசையமைப்பாளர்கள், பாடகர்கள் லைவ் கான்செப்ட் நடத்துகிறார்கள். ஆனால் அதற்கு வரும் மக்கள் அவர்கள்தான் பாடுகிறார்கள் என்று நம்பி ஏமாந்து விடுகிறார்கள். ஆனால் உண்மை அது கிடையாது. அவர்கள் பாடல்களுக்கு வெறும் லிப் சிங் மட்டுமே செய்து வருகிறார்கள். அது மிகப்பெரிய ஏமாற்று வேலை.

மக்களை ஏமாற்றும் செயல். அப்படி செய்வது மிகவும் தவறான விஷயம் என்று பேசியிருந்தார். அது மட்டும் இல்லாமல் எப்போது அவர்கள் மாட்டிக்கொள்கிறார்கள் என்றால் லிப்சிங்  சரியாக செய்யாத போது மக்களிடம் மாட்டிக் கொள்கிறார்கள். அப்போதுதான் அவர்களும் உணர்கிறார்கள் அவர் பாடவில்லை என்பதை என்று கூறியிருந்தார். அது மட்டும் இல்லாமல் ஏ ஆர் ரகுமான் கான்செட்டில் நடந்தது சரியா என்று கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் அளித்த டி. இமான் ஏ ஆர் ரகுமான் கான்செப்டில் பல உள்அரசியல்கள் இருக்கலாம் என்று தெரிவித்திருக்கின்றார்.