தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக கொடி கட்டி பறந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் விஜய். இவரின் நடிப்பில் தற்போது லியோ திரைப்படம் ரிலீசாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் வசூலில் சக்க போடும் போட்டு வருகிறது. அக்டோபர் 19ஆம் தேதி வெளியான இத்திரைப்படம் முதல் நாளே உலகம் முழுவதும் 148.5 கோடி வசூலித்து இதுவரை எந்த திரைப்படமும் செய்யாத சாதனையை நிகழ்த்தியது. இதைத்தொடர்ந்து தற்பொழுது 4 நாட்களில் 410 கோடியை எட்டியுள்ளதாக கூறப்பட்டது.

இதைத்தொடர்ந்து நேற்று மட்டும் 70 கோடி வசூல் செய்து 5 நாட்களில் 480 கோடியை எட்டியுள்ளதால் இதனை தளபதி ரசிகர்கள் கொண்டாடி தீர்த்து வருகின்றனர். இந்த திரைப்படத்தை தொடர்ந்து வெங்கட் பிரபு இயக்கும் தளபதி 68 திரைப்படத்தின் விஜய் நடிக்க உள்ளார். ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த திரைப்படதில் விஜய் – வெங்கட் பிரபு – யுவன் சங்கர் ராஜா கூட்டணி இணைகின்றனர். இத்திரைப்படத்தில் இதுவரை டபுள் ஆக்ஷனில் யாரும் செய்திடாத பல புதிய முயற்சிகளை எடுப்பதற்கு வெங்கட் பிரபு திட்டமிட்டுள்ளார்.

சமீபத்தில் தளபதி 68 திரைப்படத்தின் பூஜை சென்னையில் பிரசாந்த் ஸ்டூடியோவில் நடைபெற்று முடிந்தது. லியோ திரைப்படத்தின் வெளியீட்டை முன்னிட்டு ‘தளபதி 68’ அப்டேட்களை படக்குழு வெளியிடாமல் இருந்தது. இந்நிலையில் நேற்று நாளை மதியம் 12.05 மணிக்கு படத்தின் முக்கிய பூஜை வீடியோவுடன் ,படத்தில் நடிக்கும் நடிகர்களை பற்றியும் வெளியிடப்போவதாக தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிட்டிருந்தார்.

இந்நிலையில் இன்று இயக்குனர் வெங்கடேஷ் பிரபு தனது இன்ஸ்டா பக்கத்தில் தளபதி 68 பட பூஜை வீடியோவை வெளியிட்டுள்ளார்.அந்த வீடியோவில் நடிகை சினேகா, நடிகை லைலா, நடிகர் மைக் மோகன், நடிகர் விடிவி கணேஷ், நடிகர் யோகி பாபு என பல திரைபிரபலங்கள் இத்திரைப்படத்தில் நடிக்க இருப்பதாக கூறப்பட்டுள்ளது. தளபதிக்கு ஜோடியாக நடிகை மீனாட்சி சவுத்ரி நடிக்க இருப்பதும் குறிப்பிடத்தக்கது. தற்பொழுது இந்த பூஜை வீடியோ இணையத்தில் தீயாய் பரவி வருகிறது. இதோ அந்த வீடியோ…
Happy #VIJAYadhasmi #Thalalathy68 https://t.co/k17B1YVpxP
— venkat prabhu (@vp_offl) October 24, 2023
