முன்னணி நடிகையாக வலம் வரும் ஷில்பா மஞ்சுநாத் மிஸ் கர்நாடகா பட்டம் வென்றுள்ளார். மாடலிங் துறையில் ஆர்வம் கொண்ட ஷில்பா கடந்த 2013-ஆம் ஆண்டு கர்நாடக மாநில அழகி போட்டியில் கலந்து கொண்டார். அந்த போட்டியில் வெற்றி பெற்று ஷில்பா மிஸ் கர்நாடகா என்ற பட்டத்தை வென்றார்.

இவர் பிரபல ரியாலிட்டி நிகழ்ச்சியான லைஃப் சூப்பர் குரூப் என்ற நிகழ்ச்சியின் மூலம் திரைப்பயணத்தை தொடங்கினார். கடந்த 2016-ஆம் ஆண்டு வெளியான முன் கருமலே 2 என்ற கன்னட திரைப்படத்தின் மூலம் வெள்ளி திரையில் அறிமுகம் ஆனார். அதன் பிறகு மலையாளத்தில் ரோசாப்பூ என்ற படத்தில் நடித்தார்.

தமிழில் விஜய் ஆண்டனி நடிப்பில் வெளியான காளி திரைப்படத்தில் ஷில்பா பார்வதி கதாபாத்திரத்தில் நடித்தார். இதனையடுத்து ஹரிஷ் கல்யான் ஜோடியாக இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் என்ற திரைப்படத்தில் நடித்து பிரபலமானார்.

இந்த திரைப்படத்தில் இடம் பெற்ற கண்ணம்மா உன்ன என்ற பாடல் ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றது. சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்கும் ஷில்பா மஞ்சுநாத் அவ்வபோது போட்டோ சூட் நடத்தி புகைப்படங்களை வெளியிடுவார். தற்போது மார்டன் நிலையில் ஷில்பா பகிர்ந்த புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.

