தலைவரே.. நீங்க எங்கேயோ போயிட்டீங்க..! மலையாள ஸ்டார் மம்முட்டிக்கு ஆஸ்திரேலியாவில் கிடைத்த அங்கீகாரம்.. என்ன தெரியுமா..?

By admin on ஐப்பசி 20, 2023

Spread the love

மலையாள சூப்பர் ஸ்டாரான மம்முட்டி இதுவரை 350-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் 3 தேசிய திரைப்பட விருதுகள், 7 கேரள மாநில திரைப்பட விருதுகள், 13 தென்னிந்திய பிலிம் பேர் விருதுகளை வென்றுள்ளார். கடந்த 1998-ஆம் ஆண்டு மம்முட்டிக்கு பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டது. இவர் தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி உள்ளிட்ட மொழி திரைப்படங்களில் நடித்துள்ளார்.

   

இந்நிலையில் மம்மூட்டியின் கலை சேவையை அங்கீகரிக்கும் பொருட்டு ஆஸ்திரேலியா நாடாளுமன்றத்தில் அவரது சிறப்பு தபால்தலை வெளியிடப்பட்டிருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் ஆஸ்திரேலியா நாட்டின் பிரதமர் ஆண்டனி அல்பானிஸ், பிரண்ட்ஸ் ஆப் இந்தியா அமைப்பின் தலைவர் ஆண்ட்ரூ சார்டன் எம்பி ஆகியோர் கலந்துகொண்டு மம்முட்டி உருவம் பொறித்த தபால் தலையை வெளியிட்டனர்.

   

 

அதனை இந்தியாவின் தலைமை கமிஷனர் மண்பிரித் வோராவிடம் வழங்கியுள்ளனர். இந்த நிகழ்ச்சியில் ஆண்ட்ரூ சார்டன் பேசியதாவது, மம்மூட்டி இந்திய கலாச்சாரத்தின் வெளிப்பாடாக திகழ்கிறார். அவரது கலை சேவையை பாராட்டுகிறோம் என கூறினார். மம்முட்டி தபால் தலை ஆஸ்ரேலியா நாட்டின் சந்தைக்கு உடனடியாக வந்தது. வரும் நாட்களில் தபால் சேவைகளில் மம்முட்டி தபால் தலைகள் பயன்படுத்தப்பட உள்ளதால் மம்முட்டி ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.