3 வருஷம் ஒருத்தர் என்னை சின்சியரா காதலிச்சாரு.. ஆனால்…? தன்னுடைய காதல் கதை குறித்து நடிகை ரம்யா பாண்டியன் ஓபன் டாக்…!

By Begam on ஐப்பசி 19, 2023

Spread the love

தமிழ் சினிமாவில் ஜோக்கர், ஆண் தேவதை போன்ற படங்களில் ஹீரோயினாக நடித்தவர் நடிகை ரம்யா பாண்டியன். ஆனால் ரசிகர்களிடம் எதிர்பார்த்த அளவிற்கு  வரவேற்பு இவருக்கு கிடைக்கவில்லை. எனவே மொட்டை மாடியில் தனது இடுப்பை காட்டி கவர்ச்சி போட்டோஷூட் நடத்தி ஒரே இரவில் பிரபலமானார் .

   

அந்தப் புகைப்படங்கள் செம வைரலாகி ரசிகர்கள் மத்தியில் ரம்யா பாண்டியனுக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. பின்னர் விஜய் தொலைக்காட்சியின் குக் வித் கோமாளி, கலக்கப்போவது யாரு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். இதன் மூலம் கிடைத்த பிரபலம் காரணமாக பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

   

 

பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் ஏராளமான ரசிகர்கள் இவருக்கு உருவாகினர். ஆனாலும் ஒரு சில நெகட்டிவ்வான விமர்சனங்களும் கிடைத்தது. பட வாய்ப்புகள் பெரிய அளவில் இல்லாததால் இவர் தற்பொழுது கவர்ச்சி ஆயுதத்தை கையில் எடுத்துள்ளார். தற்போது இவரின் கைவசம் இடும்பன் காரி, உள்ளிட்ட ஓரிரு படமே உள்ளது.

சமீபத்தில் பேட்டி ஒன்றில் கலந்துகொண்ட நடிகை ரம்யா பாண்டியன் தனது கல்லூரி காதல் குறித்து மனம் திறந்து பேசியுள்ளார். அதில் அவர் கூறியதாவது, ‘நான் கல்லூரியில் படிக்கும் போது ஒருவர் என்னை பார்ப்பதற்காக பேருந்து நிலையத்தில் காத்துகொண்டு அங்கயே இருப்பார்.

நான் கல்லூரிவிட்டு திரும்பி வரும் போதும் நின்று கொண்டு இருப்பார். இந்த மாதிரி மூன்று வருடம் என்னை அவர் பாலோ செய்து கொண்டே வந்தார். ஆனால் கடைசியில் ஒரு நாள் என்னை ப்ரொபோஸ் செய்து விட்டார். அதுக்கு நான் முடியாது என்று சொல்லிவிட்டு வந்துவிட்டேன்’ என்று மனம்திறந்து கூறியுள்ளார் நடிகை ரம்யா பாண்டியன்.