‘தளபதி’யின் மகன் டைரக்டர்… ‘தல’ மகன் புட் பால் பிளேயர் ஆ…? மெடல்களை வாங்கி குவித்த ‘குட்டி’ தல… வாழ்த்தும் ரசிகர்கள்…

By Begam on ஐப்பசி 18, 2023

Spread the love

தென்னிந்திய சினிமாவின் முன்னணி நட்சத்திரங்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் அஜித். இவர் தற்பொழுது விடாமுயற்சி என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இத்திரைப்படத்தை இயக்குனர் மகிழ் திருமேனி இயக்க உள்ளதும் குறிப்பிடத்தக்கது. இப்படத்தை லைக்கா நிறுவனம் தயாரிக்கிறது. மேலும் இப்படத்தை எதிர்பார்த்து ரசிகர்கள் ஆவலாக காத்திருக்கின்றனர்.

   

நடிகர் அஜித்துக்கு ஜோடியாக நடிகை திரிஷா நடிக்க உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இப்படத்தின் தலைப்பை விடாமுயற்சி என்று வைத்தாலும் படத்திற்காக ஒரு முயற்சி கூட எடுக்கவில்லை என்று ரசிகர்கள் ஒரு பக்கம் கதறி வந்தனர். இந்நிலையில் ரசிகர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் வகையில் தற்பொழுது விடாமுயற்சி ஷூட்டிங் அஜர்பைஜானில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

   

 

நடிகர் அஜித் நடிகை ஷாலினியை காதலித்து திருமணம் செய்து கொண்டதும், அவர்களுக்கு தற்பொழுது அனோஸ்கா, ஆத்விக் என்று இரண்டு பிள்ளைகள் இருப்பதும் நாம் அனைவரும் அறிந்த ஒன்றே. நடிகர் அஜித்தின் மகன் ஆத்விக் ஃபுட்பால் விளையாடுவதில் மிகவும் ஆர்வம் கொண்டவர். இவர் கால்பந்து விளையாடும் புகைப்படங்கள் சமீபத்தில் சமூக வலைதளங்களில் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகின்றது.

தற்பொழுது இவர் சென்னையின் FC Grassroot அகாடமியில் சிறப்பாக விளையாடி பதக்கத்தை வென்றுள்ளார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள்தான் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. இப் புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.