மளமளவென சம்பளத்தை உயர்த்திய ராஷ்மிகா மந்தனா.. முன்னணி நடிகைகளுக்கு டஃப் கொடுப்பாங்க போலயே ..!!

By admin on ஐப்பசி 15, 2023

Spread the love

பிரபல முன்னணி நடிகையான ராஷ்மிகா மந்தனா கிரிக் பார்ட்டி என்ற கன்னட திரைப்படத்தில் நடித்து பிரபலமானார். பின்னர் விஜய் தேவரகொண்டா உடன் நடித்த கீதா கோவிந்தம் படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

   

கன்னடம், தெலுங்கு படங்களில் நடித்து வந்த ராஷ்மிகா கார்த்தியுடன் இணைந்து சுல்தான் படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் திரை உலகில் அறிமுகமானார். இந்நிலையில் ராஷ்மிகா அர்ஜுன் ரெட்டி படத்தை இயக்கிய சந்திப் ரெட்டி இயக்கத்தில் உருவாகியுள்ள அனிமல் படத்தில் நடித்துள்ளார்.

   

 

இந்த படத்தில் ரன்பீர் கபூருக்கு ஜோடியாக ராஷ்மிகா நடிக்கிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு அனிமல் படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றது. காஷ்மிகா மந்தனா தனது சம்பளத்தை உயர்த்தியதாக சமூக வலைதளத்தில் தகவல் உலா வருகிறது.

விஜய்யுடன் சேர்ந்து நடித்த வாரிசு திரைப்படத்திற்கு ராஷ்மிகா மந்தனா 3 கோடி ரூபாய் சம்பளமாக வாங்கியுள்ளார். தற்போது அனிமல் படத்திற்காக ராஷ்மிகா 4 கோடி ரூபாய் சம்பளம் வாங்கி இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.