உலகக்கோப்பை கிரிக்கெட்… இந்தியா வெற்றியை தொடர்ந்து ஒலிக்கப்பட்ட ‘வந்தே மாதரம்’ பாடல்… அதிர்ந்து போன ஸ்டேடியம்…. நடிகர் சதீஷ் வெளியிட்ட வீடியோ…

By Begam on ஐப்பசி 15, 2023

Spread the love

தமிழ் சினிமாவில் ஹீரோக்களுக்கு எவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறதோ அதே அளவுக்கு காமெடி நடிகர்களுக்கும் முக்கியத்துவம் உண்டு. அந்த வகையில் காமெடியில் கலக்கிக் கொண்டிருப்பவர் நடிகர் சதீஷ். விஜய், சிவகார்த்திகேயன், விஜய்சேதுபதி உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் இணைந்து காமெடி செய்தவர் நடிகர் சதீஷ். நடிகர் சிவகார்த்திகேயன் உடன் ரெமோ, மிஸ்டர் லோக்கல், வேலைக்காரன், மான்காரத்தே உள்ளிட்ட பல படங்களில் இணைந்து பணியாற்றி உள்ளார் சதீஷ்.

   

இதன் மூலம் சிவகார்த்திகேயன் சதிஷ் இருவருக்கும் இடையே ஒரு நல்ல நட்புறவு தொடர்ந்து கொண்டிருக்கிறது.பல்வேறு நாடகங்கள் மற்றும் தொலைக்காட்சி தொடர்களில் நடித்து கொண்டிருந்த இவர், ஜித்தன் ரமேஷ் நடித்த ‘ஜெர்ரி’ திரைப்படத்தின் மூலம் வெள்ளித்திரைக்கு அறிமுகமானார். இதுவரை காமெடியில் மட்டுமல்லாமல் குணச்சித்திர வேடங்களிலும் கலக்கி வந்துள்ளார் சதீஷ்.  தற்போது இவர் ஹீரோவாகவும் அவதாரம் எடுத்திருக்கிறார்.

   

 

நடிகர் சதீஷுக்கு கிரிக்கெட் மிகவும் பிடித்த விளையாட்டுகளில் ஒன்று. ஐபிஎல் மேட்ச் சமயங்களில் கூட கிரிக்கெட் மைதானத்திலிருந்து பல வீடியோக்களை இவர் வெளியிட்டிருந்தார். தற்பொழுது உலக கோப்பைக்கான கிரிக்கெட் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் பாகிஸ்தான் இந்தியா இடையே நேற்று நடைபெற்ற போட்டியில் இந்தியா வெற்றி பெற்றது. அப்பொழுது வந்தே மாதரம் இசை ஒலிக்கப்பட்டதை தொடர்ந்து எமோஷனலான நடிகர் சதீஷின் வீடியோ தற்பொழுது இணையத்தில் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது. இதோ அந்த வீடியோ…

 

View this post on Instagram

 

A post shared by Sathish (@actorsathish)