விக்ரமன் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி மிகப்பெரிய வெற்றியை கொடுத்த திரைப்படம் பூவே உனக்காக. இந்த திரைப்படம் விஜய் ரசிகர்களுக்கு மிகவும் விருப்பமான திரைப்படமாக தற்போது வரை இருந்து வருகின்றது. பூவே உனக்காக திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்தவர் நடிகை சங்கீதா. இந்த திரைப்படத்தில் விஜயின் கதாபாத்திரம் எந்த அளவுக்கு வரவேற்பை பெற்றதோ அதே அளவிற்கு வரவேற்பை சங்கீதாவின் கதாபாத்திரமும் பெற்றிருந்தது.

துறுதுறுப்பான நடிப்பால் ரசிகர்களை கவர்ந்திருந்தார். 90’களில் ஹோம்லியான நடிகையாக வளம் வந்த இவர் அதிக ரசிகர் பட்டாளத்தை வைத்திருந்தார். தொடர்ந்து அதிக திரைப்படங்களில் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் திடீரென்று ஒளிப்பதிவாளர் சரவணன் என்பவரை திருமணம் செய்து கொண்டு சினிமாவை விட்டு விலகி விட்டார். ஒளிப்பதிவாளர் சரவணன் பூவே உனக்காக திரைப்படத்தில் ஒளிப்பதிவாளராக பணியாற்றினார்.

அப்படத்தில் பணியாற்றும் போது இருவரும் காதலித்து திருமண வாழ்க்கையில் இணைந்து இருக்கிறார்கள். இவர்களின் காதலை விஜய்யும், இயக்குனர் விக்ரமன் இருவரும் நம்பவே இல்லை என்று சமீபத்திய பேட்டியில் சங்கீதா தெரிவித்து இருந்தார். அது மட்டும் இல்லாமல் பூவே உனக்காக திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருந்த சமயத்தில் தான் காதல் கோட்டை திரைப்படத்திற்கான அழைப்பும் வந்தது.

இரண்டு படத்தில் எது என்று பார்க்கும்போது நான் பூவே உனக்காக திரைப்படத்தை தேர்வு செய்ததால் காதல் கோட்டை திரைப்படத்தில் தன்னால் நடிக்க முடியாமல் போனது என்று கூறியிருந்தார். எங்களது காதல் கதையை விஜயிடம் கூறிய போது அவர் மிகவும் ஷாக் ஆகிவிட்டார். நம்பவே முடியவில்லை என்று தெரிவித்தார் என சங்கீதா பேட்டியில் தெரிவித்திருந்தார்.

மேலும் சரவணன் விஜயின் மதுர, திருப்பாச்சி ஆகிய திரைப்படங்களில் ஒளிப்பதிவாளராக பணியாற்றி இருக்கிறார். நடிகை சங்கீதா பல ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது பேட்டியில் பல விஷயங்களை கூறியிருந்தார். இந்த பேட்டி தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
