தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான இயக்குனர்களில் ஒருவராக வலம் வருகிறார் லோகேஷ் கனகராஜ். தற்போது இவர் விஜய் நடிப்பில் உருவாகி இருக்கும் லியோ திரைப்படத்தை இயக்கி முடித்து இருக்கிறார். இந்த திரைப்படம் வருகிற அக்டோபர் 19ஆம் தேதி திரைக்கு வர இருக்கின்றது. இதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்து வருகிறார்.

லோகேஷ் கனகராஜ் நேற்று திருப்பதிக்கு சென்று சாமி தரிசனம் செய்து வந்திருந்தார். இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வந்தது. இந்நிலையில் சமீப காலமாக லோகேஷ் கனகராஜின் தங்கை என்ற பெயரில் ஒரு பெண்ணின் புகைப்படம் இணையத்தில் கலக்கி வருகின்றது. அந்தப் பெண்ணின் பெயர் அவந்திகா கனகராஜ்.
![]()
இந்தப் பெண் பெயர் கனகராஜ் என்ற பெயருடன் முடிகின்றது. அதுமட்டுமில்லாமல் லோகேஷ் மற்றும் அவந்திகா இருவரும் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வெளியானதை தொடர்ந்து இவர்தான் லோகேஷ் கனகராஜ் தங்கை என்ற பெயரில் வதந்திகளை கிளப்பி வருகிறார்கள். ஆனால் அவர் லோகேஷ் கனகராஜின் தங்கை இல்லை என்பது உண்மை.

அவருக்கு மூன்று அண்ணன்கள் தான். அவந்திகா கனகராஜ் தி ரூட் என்ற நிறுவனத்தின் லேண்ட் மேனேஜராக பணியாற்றி வருகிறார். இவர் சமீபத்தில் லோகேஷ் கனகராஜ் சந்தித்து புகைப்படம் எடுத்துக் கொண்டிருந்தார். அந்த புகைப்படத்தை இணையத்தின் பகிர்ந்ததை தொடர்ந்து அனைவரும் அவர் லோகேஷ் கனகராஜின் தங்கை என்ற வதந்திகளை கிளப்பி விட்டு வருகிறார்கள்.
