தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான சூர்யா நடிப்பில் வெளியான ஜெய் பீம் திரைப்படத்தில் நடித்த ஒவ்வொரு கதாபாத்திரமும் மக்கள் மனதில் நீங்காத இடம் பிடித்தது. அந்த திரைப்படம் பல்வேறு விருதுகளை வாங்கியது. இந்நிலையில் ஜெய் பீம் திரைப்படத்தில் ஹீரோயினுக்கு அக்காவாக நடித்திருப்பவர் சுபத்ரா ராபர்ட். இவர் இந்தியாவில் பிறந்து பிரான்ஸ் நாட்டில் வளர்ந்தார்.

இந்நிலையில் பல சேவைகள் செய்ய வேண்டும் என்ற நோக்கத்துடன் பிரான்சிலிருந்து இந்தியா வந்த சுபத்ரா 4 ஆண்டுகள் தியேட்டரில் வேலை பார்த்துள்ளார். இதனையடுத்து சூப்பர் ஸ்டார் நடிப்பில் வெளியான கபாலி திரைப்படத்தில் நடிக்க சுபத்ராவுக்கு வாய்ப்பு கிடைத்தது. அதன் பிறகு அவர் முன்னணி இயக்குனர்களுடன் வேலை பார்த்தார்.

இந்நிலையில் வெற்றிமாறனின் அசுரன், கர்ணன், வடசென்னை உள்ளிட்ட திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து மக்கள் மனதில் சுபத்ரா இடம் பிடித்தார். பரியேறும் பெருமாள் திரைப்படத்தில் டீச்சர் கதாபாத்திரத்தில் சுபத்ரா நடித்தார். அதன் பிறகு அவருக்கு ஜெய் பீம் திரைப்படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.

சுபத்ராவின் கணவர் ராபர்ட் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்தவர். இவர்களுக்கு ஒரு மகள் இருக்கிறார். சினிமாவில் பிஸியாக இருக்கும் சுபத்ரா சோசியல் மீடியாவிலும் ஆக்டிவாக இருக்கிறார். தற்போது சுபத்ரா தனது கணவருடன் தேனியில் வைத்து எடுத்து கொண்ட புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது.

