விஜய் டிவியில் ஒளிபரப்பாகி நிறைவடைந்த ராஜா ராணி 2 சீரியலில் வில்லி கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை அர்ச்சனா. இவர் முதன்முதலில் தொகுப்பாளராக களம் இறங்கி அனைவரின் மனதிலும் தனது அழகாலும், சிரிப்பாலும் நீங்காத இடத்தை பிடித்துள்ளார்.

இவர் சீரியலில் வில்லி கதாபாத்திரத்தில் நடித்தாலும், இவர் நிஜத்தில் குழந்தை மனம் கொண்டவராம். இவர் டிக் டாக் மூலமாக அனைவரின் மனதிலும் தனக்கென்று ஒரு இடத்தை பிடித்துள்ளார். தற்பொழுது தொகுப்பாளராக இருந்து நடிகையாக மாறிவிட்டாலும் இப்பொழுதும் அதே போட்டோ ஷூட் புகைப்படங்களையும், ரீல்ஸ் வீடியோக்களையும் இணையத்தில் பகிர்ந்து கொண்டே தான் வருகிறார்.

இவருக்கு சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள் அதிகமாக இருந்து வருகின்றனர். திடீரென ராஜா ராணி 2 சீரியலை விட்டு விலகினார் அர்ச்சனா. இதற்கு பிறகு அவர் எந்த சீரியல்களிலும் நடிக்கவில்லை. இதைத்தொடர்ந்து நடிகர் அருள்நிதி நடிக்கும் டிமாண்டி காலனி படத்தில் முக்கிய ரோலில் நடித்துள்ளார். சமூக வலைத்தளங்களில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கக்கூடியவர் நடிகை அர்ச்சனா.

இவர் அவ்வப்பொழுது தனது ஃபோட்டோ ஷூட் புகைப்படங்களை இணையத்தில் பகிர்ந்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார். இந்நிலையில் நடிகர் அர்ச்சனா தற்பொழுது அழகிய பட்டுபுடவையில் தேவதையாய் ஜொலிக்கும் புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். இப்புகைப்படங்களுக்கு ரசிகர்கள் லைக்ஸ்களை அள்ளிக் குவித்து வருகின்றனர்.

