என்னது..! இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணனின் மனைவி இந்தியர் இல்லையா..? என்னப்பா சொல்றீங்க..!

By admin on ஐப்பசி 2, 2023

Spread the love

சந்தோஷ் நாராயணன் அட்டகத்தி திரைப்படத்தின் மூலம் தமிழ் திரை உலகில் இசையமைப்பாளராக அறிமுகமானார். இவர் பல்வேறு படங்களுக்கு இசையமைத்துள்ளார். கபாலி, பரியேறும் பெருமாள் ஆகிய படங்களில் சந்தோஷ நாராயணன் இசை அமைத்த பாடல்கள் சூப்பர் ஹிட் ஆனது.

   

இந்நிலையில் சந்தோஷ நாராயணனின் மனைவி மீனாட்சி ஈழத்தமிழர் இலங்கையின் யாழ்ப்பாணம் கோண்டா என்ற இடத்தை பூர்வீகமாக கொண்டவர். இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணனும், அவரது மனைவியும் இலங்கை யாழ்பாணத்தில் இலவசமாக பிரம்மாண்ட இசை நிகழ்ச்சியை நடத்த திட்டமிட்டு இருந்தனர்.

   

 

இந்த நிகழ்ச்சியை செப்டம்பர் 30-ஆம் தேதி நடத்த திட்டமிட்டு இருந்த நிலையில் நிகழ்ச்சி ஒத்தி வைக்கப்பட்டது. அதன்படி யாழ்ப்பாணம் முற்றவெளி மைதானத்தில் அக்டோபர் 21-ஆம் தேதி மாலை 4 மணிக்கு சந்தோஷ் நாராயணனின் யாழ் கானம் இசை நிகழ்ச்சி நடைபெற உள்ளது.