சென்னை மெரினா கடற்கரையில் உலக இதய தினத்தை முன்னிட்டு தனியார் மருத்துவமனை சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட 300 பேர் இதய வடிவில் மனித சங்கிலி அமைத்தனர். பின்னர் அவர்கள் இதய பராமரிப்பின் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளனர்.

இந்நிலையில் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நடிகர் ஆதி, நிக்கி கல்ராணி தம்பதியினர் பொதுமக்களிடம் இதயம் குறித்து கலந்துரையாடினர். பின்னர் நிகழ்ச்சியில் பேசிய ஆதி, இதயம் என்பது நமது கணவன், மனைவி, நெருங்கிய நண்பர் மாதிரி. நாம் நேசிப்போம்;

ஆனால் அதன் மீது கவனம் செலுத்த மாட்டோம். எனவே தினமும் உடற்பயிற்சி செய்ய வேண்டும். நல்ல தூக்கம் இருந்தாலே உடல் சிறப்பாக செயல்படும். என் இதயம் வலிமையாக இருக்க என் மனைவி தான் காரணம் என கூறினார்.

