பழசை மறக்காத சிவகார்த்திகேயன்.. ஒற்றை வார்த்தையில் ஆப் ஆன சீரியல் நடிகர் தேவ்.. நெகிழ்ச்சி சம்பவம்..!!

By admin on ஐப்பசி 2, 2023

Spread the love

தமிழ் சின்னத்திரையில் 90-களில் இருந்து சீரியலில் நடித்து மக்கள் மனதில் நீங்காத இடம் பிடித்தவர் தேவ் ஆனந்த். இவர் சின்னத்திரை சீரியல்களில் மட்டும் இல்லாமல் படங்களிலும் நடித்துள்ளார். இந்நிலையில் தேவ் ஆனந்த சின்னத்திரை சீரியல்களில் ஹீரோ, வில்லன், குணசித்திரம் என பல்வேறு கதாபாத்திரங்களில் நடித்து ரசிகர்களை ஈர்த்தார்.

   

இதனையடுத்து விஜய் டிவியில் ஒளிபரப்பான தென்றல், சன் டிவியில் ஒளிபரப்பான ரோஜா ஆகிய சீரியல்களில் கடைசியாக நடித்தார். சமீபத்தில் தேவ் ஆனந்த் அளித்த பேட்டியில் கூறியதாவது, சின்னத்திரை மீட்டிங் ஒன்று நடந்த போது சிவகார்த்திகேயன் chief guest ஆக வந்திருந்தார். அவர் ஸ்டார் ஆகி விட்டார். என்னிடம் பேசுவாரா என்று யோசித்தேன்.

   

 

மீட்டிங் முடிந்து சிறிது நேரம் கழித்து சிவகார்த்திகேயன் என்னை அண்ணா என்று கூப்பிட்டு என்னிடம் வந்து பேசினார். என்னால் நம்பவே முடியவில்லை. என்னை ஞாபகம் இருக்கிறதா என கேட்டதற்கு என்ன அண்ணா, உங்களை எல்லாம் மறக்க முடியுமா என கூறினார். நாங்கள் சிறிது நேரம் பேசிவிட்டு அங்கிருந்து சென்றோம் என தேவ் ஆனந்த் கூறினார்.